முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்த ரவிசங்கர் !

0
முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன் மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. 
முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்த ரவிசங்கர்



முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களு க்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன் மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப் பட்டது. இதை யடுத்து, மக்களவையில் மசோதா நிறை வேறியது. 

மாநிலங்க ளவையில், பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது.

இதற்கிடையே, மக்களவை யின் பதவிக்காலம் முடிவடைந்து கலைக்கப் பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. 

அதன்பின், புதிய அரசு பொறுப்பேற்று மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது.



இந்நிலையில், பாராளு மன்றத்தின் மாநிலங்க ளவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப் பட்டது. முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

மாநிலங்க ளவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்க ளவையில் நிறைவேற்ற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்காக மாநிலங்க ளவைக்கு அனைத்து பாஜக எம்.பி.க்களும் தவறாமல் செவ்வாய்க் கிழமை வர வேண்டும் என்று அக்கட்சி மேலிடம் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings