கருணாநிதியின் சிலை திறப்புக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு !

0
கலைஞர் கருணாநிதி யின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.



முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி யின் முதலாமாண்டு நினைவு தினத்தை யொட்டி, வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை திறக்கப் படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. 
முன்னதாக சென்னை அண்ணா அறிவாலய த்தில் கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்கு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரு மான மம்தா பானர்ஜி, கருணாநிதி யின் சிலையை திறந்து வைக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings