15 வயதுக்குள் திருமணம் செய்யும் சிறுவர்கள் - யுனிசெஃப் !

0
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒருவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து கொள்வதாக யுனிசெஃப் தெரிவித் துள்ளது. 
15 வயதுக்குள் திருமணம் செய்யும் சிறுவர்கள்
குழந்தைத் திருமணம் என்பது பெண் குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகளில் எவ்வளவு பேர் குழந்தைத் திருமணங் களால் பாதிக்கப் படுகின்றனர் என்பது குறித்த ஆய்வை யுனிசெஃப் மேற்கொண்டது. 

அந்த ஆய்வில், ‘சர்வதேச அளவில் சுமார் 115 மில்லியன் சிறுவர்கள் அல்லது ஆண்கள் சட்டப்பூர்வ திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்பட் டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகள் சுமார் 82 நாடுகளில் இந்த ஆய்வை யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது. 
சாமை கோழி பிரியாணி செய்முறை !
இதன் அடிப்படையில் 15 வயதுக் குள்ளாகவே ஐந்தில் ஒரு சிறுவன் திருமணம் செய்து கொள்கிறான். 

பெண் குழந்தைகளு க்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படு வதற்கான காரணங்கள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள் மக்கள். 

அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை என்பதே நிதர்சனம். இது குறித்த ஆய்வுகளும் ஆராய்ச்சி களும் கூட வெளியிடப்பட்டுள்ளன. 

ஆனால், ஆண் குழந்தை களுக்கு எதற்காக சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர் என்பது குறித்த போதிய ஆய்வு இல்லை என்றே கூறப்படுகிறது. 
அதிக பட்சமாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் (28%) அதிக சிறுவர்கள் திருமணம் செய்து வைக்கப் படுகின்றனர். 

இரண்டாம் இடத்தில் நிகாராகுவா (19%) மற்றும் மூன்றாம் இடத்தில் மடகாஸ்கர் (13%) ஆகிய நாடுகள் உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)