இந்த முறையை பின்பற்றினால் 300 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் !

0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடில் தவிக்கிறது. 40 சதவிதம் மட்டுமே கிடைக்கும் குடிநீருக்காக ஓரே ஒரு அடிகுழாயை மட்டுமே நம்பி மக்கள் இருக்கின்றனர். மேலும் 2 குடம் குடி நீருக்கு ஒருவாரம் வரை காத்திருக்கும் அவலம் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த முறையை பின்பற்றினால் தண்ணீரை சேமிக்கலாம்



விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி செஞ்சி. இம்மாவட்டத் தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் செஞ்சி தற்போது குடிநீர் தட்டுப் பாட்டில் சிக்கித் தவிக்கிறது. தென்பெண்ணை ஆறு, மங்களாபுரம் ஏரி, சிறுகடம்பூர் ஏரி ஆகிய பகுதியில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. 
கோடை வறட்சி காரணமாக இந்த பகுதியில் இருந்து குடிநீர் வரத்து பெரும் அளவில் குறைந்து விட்டது. மக்களுக்கு குறைவாக 40 சதவீத நீர் மட்டுமே தினமும் கிடைக்கிறது .  பற்றாக் குறையாக உள்ள பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப் படுகிறது. ஒரு டேங்கர் லாரி நீர் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 
தண்ணீர் சேமிக்க
இந்த நீரும் உவர்ப்புத் தன்மை இருப்பதால் மக்கள் பெருமளவில் குடிநீருக்கும் வேறு இடத்தை நாடுகின்றனர். செஞ்சிக் உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வஉசி வீதியில் அமைந்துள்ள ஒரு போர்வெல்லில் இருந்து கை பம்பு மூலம் மக்கள் குடிநீர் தேவையை ஓரளவு தீர்த்துக் கொள்கின்றனர். 
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தால் இந்த குடிநீர் சுவையாக இருப்பதால் மக்கள் ஏழு நாட்கள் வரை காத்திருந்து பெறுகின்றனர். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே இவர்களுக்கு இந்த குடிநீர் கிடைக்கிறது. இதற்காக அப்பகுதி மக்கள் குடங்களை வரிசையாக வைத்து இருப்பது குடிநீர் பற்றாக் குறையின் அவலத்தை வெளிக்காட்டுகிறது. 



நகராட்சி மூலம் வினியோகிக் கப்படும் நீர் நன்றாக இல்லை உடல்நிலை பாதிக்கப் படுவதாக அப்பகுதி பெண்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மழை பொய்த்துப் போனதால் பூமி வறட்சியடைந்து தண்ணீர் தட்டுப்பாடு செஞ்சியில் அதிகமாக இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். 
மழை பொய்த்துப் போன பூமி
ஒரு வாரத்துக்கு இரண்டு குடம் மட்டுமே நீர் குடிநீர் கிடைப்பதால் அதை இப்பகுதி மக்கள் வீணாக்குவ தில்லை. குடிநீருக்கு மட்டுமே இதை பயன்படுத்துவ தாகவும் இந்த நிலை 11 ஆண்டுகளாக நீடிப்ப தாகவும் இப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.
கைப்பம்பு மூலம் ஒரு குடம் நீரை அடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஏற்படுவ தாகவும் நாளொன்றுக்கு 40 குடம் நீரை மட்டுமே அடித்து எடுத்துச் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நல்ல குடிநீர் கிடைக்கும் இந்தப் பகுதியில் போர்வெல் ஆழப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)