சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறை களை நாளை முதல் மாநகராட்சி அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக் கான தடை அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப் பட்டன. தற்போது வரை சென்னை மாநகராட்சி யில் மட்டும் மொத்தம் 250 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், தேக்கி வைப்போர், விற்பனை செய்வோர், அதை பயன் படுத்துவோர் என ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக அபராதம் விதிப்பதற்கான அரசாணை, கடந்த மார்ச் மாதம் வெளியிடப் பட்டது.
எனினும், சில மாதங்களில் அதிகாரிகள் சோதனைகளை கைவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தலை தூக்கின. இது தொடர்பாக செய்திகள் வெளியானதும், விழித்துக் கொண்ட அதிகாரிகள் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.
அதன்படி, நாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந் தால் அபராதம் என்ற அரசாணையின் படி, அபராதம் விதிக்கும் நடைமுறைப் படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதனடிப் படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோரு க்கு ரூ.2 லட்சம், தேக்கி வைப்போருக்கு ரூ.1 லட்சம, விற்பனை செய்வோருக்கு ரூ. 50,000 ஆயிரம், கடைகளின் பயன்படுத்து வோருக்கு ரூ. 25,000 மற்றும் நுகர்வோருக்கு ரூ.500 என முதல்கட்ட அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Thanks for Your Comments