பெரம்பூரில் வியாபாரியை கடத்திய ஆசாமி விபத்தில் சிக்கி பலி !

0
வியாபாரியை காரில் கடத்திய ஆசாமி விபத்தில் சிக்கி பலியானார். பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொடுங்கையூர் லக்ஷ்மி நகரை சேர்ந்தவர் அப்துல் கரீம் (35). பழைய கார்களை வாங்கி விற்பவர். இவரது மனைவி ஆயிஷா (32). நேற்று முன்தினம் காலை எம்கேபி நகரை சேர்ந்த ரசூல் கான் மற்றும் 2 பேர் சேர்ந்து அப்துல் கரீமிடம் பேசி தனியாக அழைத்து சென்றனர். வெகு நேரமாக அப்துல் கரீம் வராததால் ஆயிஷா தொலைபேசி யில் தொடர்பு கொண்டார். 
பெரம்பூரில் வியாபாரியை கடத்திய ஆசாமி விபத்தில் சிக்கி பலி



அப்போது கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஆயிஷா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் ரசூல் கான் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அவரிடம் அப்துல் கரீம் ₹10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், அதை திருப்பி தரவில்லை என கூறப்படு கிறது. இதனால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில் ரசூல் கான், அப்துல் கரீமை காரில் கடத்தியது தெரிந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, கடத்தல் காரர்கள் சென்ற கார் திண்டிவனம் அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ரசூல் கானின் தம்பி வசீர்கான் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேர் லேசான காயத்துடன் தப்பினர். திண்டிவனம் போலீசார் இவர்களை மீட்டு சிகிசிச்சைக் காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 



பின்னர் இது பற்றி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொடுங்கையூர் போலீசார் திணடிவனம் சென்றனர். இதற்கிடையில் ரசூல் கான் அங்கிருந்து தப்பியோடி விட்டான். போலீசார், பிரசாத், அமுதா, அப்துல் கரீம் ஆகிய 3 பேரையும் கொடுங்கையூர் கொண்டு வந்தனர். விசாரணையில் பணம் கொடுக்காத தால் அப்துல் கரீமை கடத்தியது தெரிய வந்தது. 
பின்னர் பிரசாத்தையும் அமுதாவைும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி யோடிய முக்கிய குற்றவாளியான ரசூல்கானை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings