அந்த தவறை செய்திருக்காவிட்டால் - ஆஸி.யின் தவறை சுட்டிக் காட்டிய மாஸ்டர் !

0
பாண்டியா கேட்சை நழுவ விட்டதுதான் ஆஸ்திரேலியா செய்த மிகப் பெரிய தவறு என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. 
ஆஸி.யின் தவறை சுட்டிக் காட்டிய மாஸ்டர்



அதில் களமிறக்கப் பட்ட தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக ஆடினர். தவான் மற்றும் கோலி பார்ட்னர்ஷிப்பால் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. தவான் சதம் அடித்ததோடு, 109 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்குப்பின் களமிறக்கப் பட்டவர் ஹர்திக் பாண்டியா. ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் பந்தை எதிர் கொண்டார். 
ஆனால் துரதிர்ஷ்டவச மாக முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விட்டார். எனினும் அந்த கேட்சை நழுவ விட பாண்டியாவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. பின்னர் அதிரடியாக 27 பந்துகளில் 48 ரன்களை பாண்டியா எடுத்தார். இந்த நிலையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா செய்த தவறு என்ன என்பதை சுட்டிக் காட்டி பேசியுள்ளார். 



அவர் கூறியிருப்பதாவது: 
ஹர்திக் பாண்டியா போன்றதொரு வீரருக்கு ஆட்டத்தின் போது 2வது வாய்ப்பு வழங்கினால், அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார். அந்த கேட்சை நழுவ விட்டது தான் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி செய்து விட்ட மிகப்பெரிய தவறு. தவானுக்கு பிறகு தோனி அல்லது ஹர்திக் பாண்ட்யா களமிறக்கப்பட வேண்டும் ஆனால், நான் ஏற்கனவே நினைத்தது போல் ஹர்திக் பாண்டியா களமிறக்கப் பட்டது சரியான முடிவு தான் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)