பிரானா மீன்களைத் தெரியுமா? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

பிரானா மீன்களைத் தெரியுமா?

ஆக்ரோஷமான திமிங்கிலம் முதல் வீட்டில் சாப்பிடும் அயிரை மீன் வரை பல மீன்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பிரானா (Piranha) என்ற மீனைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மிகவும் மூர்க்கமான மீன் என்று இதைச் சொல்வார்கள். உண்மையில் பிரானா மீன்களின் குணங்கள் என்ன?
பிரானா மீன்‘பிரானா’ என்றால் அமேசான் பழங்குடி மொழியில் ‘மீன் பல்’ என்று அர்த்தமாம். இவை தென் அமெரிக்க ஆறுகளில் காணப்படும். சில வகைகள் மட்டும் வட அமெரிக்க ஆறு, ஏரிகளிலும் நம்முடைய அண்டை நாடான வங்க தேசத்தின் காப்டை ஏரியிலும் காணப்படு கின்றன.
பிரானாவின் உடல் வெள்ளி நிறத்தில் சிவப்பு புள்ளிகளுடன் இருக்கும். இதனால் இவை சேற்றில் மறைந்து கொள்வது எளிது. பிரானாவின் பற்கள் ஈட்டியைப் போலக் கூர்மையாக இருக்கும். இந்தப் பற்களால் இரும்பு ஹூக்கைக் கூடக் கடித்து விடும். பிரானாவின் பற்களை வைத்துப் பழங்குடிகள் ஆயுதங்களைக் கூடச் செய்துள்ளார்கள்.பிரானா மீனின் கூர்மையான பற்களை வைத்து உயிர்களைக் கொல்வதில் தீவிரம் கொண்ட மீன்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் பிரானாக்கள் அனைத்துண்ணிகள். நத்தை, மீன் போன்ற கடல் உயிரினங்கள், தாவரங்கள், விதைகள், பழங்களைச் சாப்பிடும். சில நேரம் நீரில் விழும் பாலூட்டிகளையும் பறவைகளையும்கூடச் சாப்பிடும்.
எல்லாப் பிரானா மீன்களும் அபாயகர மானவை அல்ல. சைவ பிரானா மீன்களும் உண்டு. இரை கிடைக்கா விட்டால், பிரானா மீன்கள் தங்களுக் குள்ளேயே சண்டையிட்டு, சக மீன்களைக் கொன்று சாப்பிடும். பிரானாக்கள் கூட்டமாக வாழும் பண்புடையவை. ஒரு கூட்டத்தில் 1000 மீன்கள் வரை இருக்கும்.