விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 9ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை, கோயம்புத்தூர், புதுச்சேரி மற்றும் மும்மை போன்ற வெளி மாநிலத்தில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். கோவில் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள், அரவானைக் கணவனாக நினைத்து ஆடிப்பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர்.


Thanks for Your Comments