எகிப்தில் விடுதியில் நடனமாடிய பெண்ணுக்கு சிறை !

0
ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கு அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வளை தலங்களில் வைரலாக பரவியுள்ளது.
எகிப்தில் நடனமாடிய பெண்ணுக்கு சிறை
எகிப்தில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. இதை யடுத்து நாட்டின் நன்மதிப்பை அந்த பெண் சீர்குலைத்து விட்டதாக பல்வேறு தரப்பினர் அந்த பெண் மீது புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த பெண் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித் துள்ளது. அரபு நாடுகளை போல் எகிப்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. 

அதை சீர்குலைக்கும் வகையில் இந்த பெண் நடந்து கொண்டதால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்று நீதிமன்றம் தொிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)