கற்றல் குறைப்பாடுடைய குழந்தைகளை கிண்டல் செய்த மோடி !

0
டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைப்பாடு பாதிப்புடைய குழந்தை களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டு கிண்டல் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி யுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கற்றல் குறைப்பாடுடைய குழந்தைகள்


கடந்த சனிக் கிழமையன்று நடைபெற்ற ஸ்மார்ட் ஹேக்கத் தான் 2019 நிகழ்ச்சியில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரை யாற்றினார். 

அப்போது, டேராடூனை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர், வாசிப்பதி லும், எழுதுவதி லும் சிரமம் கொள்ளும் டிஸ்லெக்ஸியா பாதிப்புடைய குழந்தை களுக்கு உதவும் திட்டம் குறித்து கூறினார்.

டிஸ்லெக்ஸியா பாதிப்புடைய குழந்தை களுக்கு உதவும் வகையில் தங்களிடம் திட்டம் உள்ளது என்றும், தாரே ஜமீன் பார் படத்தில் வருவது போல், அவர்கள் மிகுந்த கற்பனை மற்றம் அறிவாற்றல் உள்ளவர்கள் என அந்த மாணவி கூறிக் கொண்டிரு க்கும் போது குறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாணவியிடம் உங்கள் திட்டம் மூலம் 40-50 வயதுடைய குழந்தை களும் பயன்பெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அப்போது, மாணவர்கள் கடும் சிரிப்பழை களும், கைத்தட்டல் களும் எழுந்தது. தொடர்ந்து, அந்த மாணவி முடியும் என்று பிதல் கூற, அதற்கு பிரதமர் மோடி அப்படி என்றால் அந்த குழந்தையின் தாய் மிகவும் சந்தோஷப் படுவார் என்று கூறினார்.


மோடியின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர் கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் அனைவரும் ராகுலை தொடர்ந்து குழந்தை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அதே போல், ராகுலை குழந்தை என்று கிண்டல் செய்து மோடி பேசி யுள்ளார். 

எனினும் இது, டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை கொச்சைப் படுத்துவது போன்றது என சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings