கே.பி.எம் -க்கு கிருஷ்ணகிரி ஓ.பி.எஸ் மகனுக்குத் தேனி - வேட்பாளர் பட்டியல் !

0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தென் சென்னையில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டி யிடுகிறார். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசி வந்தபோது, கிரவுண்ட் பிளாசாவில் அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி ஓகே ஆனது. இப்படி தி.மு.கவுக்கு முன்பே கூட்டணி ரேஸில் வேகமெடுத்தது அ.தி.மு.க. 
கே.பி.எம் -க்கு கிருஷ்ணகிரி ஓ.பி.எஸ் மகனுக்குத் தேனி


தொடர்ந்து அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், இணைந்த பின்பு, தே.மு.தி. கவுடனான பேச்சு வார்த்தை மட்டும் இழுபறியிலே சென்றது. பல கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பின்பு, இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. 

ஆனாலும், தொகுதி ஒதுக்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், நேற்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி தொகுதி பங்கீட்டு குறித்து தெளிவு படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், எந்தெந்த தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுக்கு என்று இன்று காலை தொகுதிப் பட்டியலை வெளி யிட்டுள்ளது அ.தி.மு.க.

இந்த நிலையில் இன்று மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி நேர ஆலோசனை க்குப் பிறகு அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. 

அதன்படி, ``தென் சென்னை - ஜெயவர்தன், திருவள்ளூர் - வேணு கோபால், காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல், திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ண மூர்த்தி, பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி, கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி, தேனி - ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், மயிலாடுதுறை - ஆசை மணி, கரூர் - தம்பிதுரை, பொள்ளாச்சி மகேந்திரன், நீலகிரி - தியாகராஜன், திருப்பூர் - ஆனந்தன், நாமக்கல் - காளியப்பன், சேலம் - சரவணன், ஆரணி - ஏழுமலை, ஈரோடு - மணிமாறன், சிதம்பரம் - சந்திரசேகர், நாகப்பட்டினம் - சரவணன், மதுரை - ராஜ்சத்யன், திருநெல்வேலி - மனோஜ் பாண்டியன்" ஆகியோர் போட்டியிட வுள்ளனர்.


இதேபோல் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி, ``பூந்தமல்லி - G வைத்திய நாதன், பெரம்பூர் - RS ராஜேஷ், திருப்போரூர் - S ஆறுமுகம், சோளிங்கர் - G சம்பத், குடியாத்தம் - கஸ்பா R மூர்த்தி, ஆம்பூர் - J ஜோதிராமலிங்க ராஜா, ஒசூர் - S ஜோதி, பாப்பிரெட்டிபட்டி - A கோவிந்தசாமி, அரூர் - V சம்பத் குமார், நிலக்கோட்டை - S தேன்மொழி, 

திருவாரூர் - R ஜீவானந்தம், தஞ்சாவூர் - R காந்தி, மானாமதுரை - S நாகராஜன், ஆண்டிப்பட்டி - A லோகிராஜன், பெரியகுளம் - M முருகன், சாத்தூர் - MSR ராஜவர்மன், பரமக்குடி - N சதன் பிரபாகர், விளாத்திகுளம் - P சின்னப்பன்" உள்ளிட்டோர் போட்டி யிடுகின்றனர். ஓசூரில் பாலகிருஷ்ணா ரெட்டி மனைவி ஜோதிக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings