பறவைகள் வெப்பத்தை வெளியிடுவது எப்படி?





பறவைகள் வெப்பத்தை வெளியிடுவது எப்படி?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும் போது மனிதர் களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக் கொண்டு ஆவியாவ தால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப் படுகிறது. மனிதர்களு க்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளு க்கு வியர்ப்ப தில்லை.
பறவைகளின் பரிணாம வளர்ச்சி


சுற்றுச் சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடல் வெப்ப நிலையை மாற்றி யமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவ தாக ஆஸ்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.

இதன் மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்ப நிலையை சார்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. இந்த முடிவு எட்டப் படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப் பட்டன.

வெப்பச் சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர் சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டை யாகவும் காணப் படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவை யெல்லாம் உணவைப் பெறுவதற் காகவும், எதிர் பாலினத்தை ஈர்ப்பதற் காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப் பட்டுள்ளது.

பறவை களுக்கு ஒரு ‘வெப்பத்தை பரப்பு’வதற்காக அவற்றின் அலகுகள் செயல் படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப் பட்டுள்ளது. 214 பறவை யினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படை யில் பகுக்கப்பட்டன.
பறவைகளின் வெப்பம்


அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந் திருந்தது. குளிர்ச்சி யான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன.

சுருக்கமாகச் சொல்லப் போனால், பறவைகளின் அலகுகள் ஒரு வெப்பத்தை பரப்புவது போன்று செயல் படுவதும், வெப்பத்தை பரப்புவது (Radiator) தேவை யில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)