தேமுதிகவுடன் துரைமுருகன் பேசியது என்ன?

0
முன்னதாக, நேற்று தேமுதிக நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரை முருகனை அவரது இல்லத்து க்குச் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து செய்தி யாளர்களை சந்தித்த துரை முருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணி யில் வருவது குறித்து தான் பேசினர். 
தேமுதிகவுடன் துரைமுருகன் பேசியது என்ன?


எங்களு க்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தா லும், தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. இனி கூட்டணி யில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டேன்' என தெரிவித்தார்.

இது தொடர்பாக சுதீஷிடம் கேட்ட போதும், ஆம் துரை முருகனுடன் கூட்டணி குறித்து பேசினோம். அதிமுக- பாமக இடையில் தேர்தல் உடன் படிக்கை கையெழுத்தான அதே நாளில் தான் நாங்கள் திமுக பொருளாளர் துரை முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம்' என்று கூறி யிருந்தார்.

இது குறித்து இன்று செய்தி யாளர்களிடம் பேசிய தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், ஒரே மாவட்டத்தை சேர்ந்த துரை முருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசி யுள்ளோம். 

துரை முருகனுட னான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்பட வில்லை முருகேசன் மற்றும் இளங்கோவன் துரை முருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங் களுக்காகவே.


ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் பேசக் கூடாதா? அது போல், நான் 10 நாட்களுக்கு முன் துரை முருகனுடன் பேசினேன், நேற்று பேச வில்லை. ஆனால் ஊடகங்களில் நேற்று நான் அளித்த பதில் தவறாக புரிந்து கொள்ளப் பட்டு, நேற்று துரை முருகனிடம் பேசியதாக கருதப்பட்டு விட்டது.

மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம். பாஜக - அதிமுக-வுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. ஓரிரு நாளில் தொகுதி குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக் கப்படும் என்று கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings