சென்னையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் !

0
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர், அம்பத்தூர் தேசிய நெடுஞ் சாலை அருகே தனது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, நேற்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமாக பெறக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத் தப்பட்டு உள்ளது. ஆனால் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் பணம் பெறும் வீடியோ வெளியான தால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடை நீக்கம் செய்து உத்தர விட்டார்.

ரவிச்சந்திரன், ஏற்கனவே தேனாம் பேட்டையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற தர்மராஜ் என்ற போலீஸ்காரரை விரட்டிச் சென்று கீழே தள்ளி விபத்து ஏற்படுத்திய வீடியோவும் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை யடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆயுதப் படைக்கு மாற்றப் பட்டார். அங்கிருந்து கடந்த மாதம்தான் அவர் அம்பத்தூர் போக்கு வரத்து போலீசுக்கு பணிமாற்றம் செய்யப் பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் உடனடியாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings