சிரியாவில் ஐ. எஸ் பிடியில் சிக்கிய குடும்பங்கள் !

0
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் 200 குடும்பங்களைப் பிடித்து வைத்திருப் பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.


இது குறித்து மனித உரிமை ஆணைய த்தின் உயரதிகாரி மிச்செல்லா கூறும் போது, ''சிரியாவில் ஐஎஸ் கட்டுப் பாட்டிலுள்ள உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் 200 குடும்பங் களை வெளியேற விடாமல் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். 

செவ்வாய்க் கிழமை 10க்கும் மேற்பட்ட லாரிகளி லிருந்து பொதுமக்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளி லிருந்து மீட்கப் பட்டனர்.

இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் பேர் ஐஎஸ் பகுதியி லிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் சில குடும்பங் களை வர விடமால் ஐஎஸ் தீவிரவாதிகள் தடுத்துள்ளனர்'' என்றார்.

கடந்த திங்கட்கிழமை இட்லிப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். இந்தத் தாக்குதலில் 51 பேருக்கும் மேற் பட்டவர்கள் காய மடைந்தனர்.


சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கர வாதிகளு க்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

ஐஎஸ் பயங்கர வாதிகளின் கட்டுப் பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.இ இந்த நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings