பசி உணர்வு எப்படி தோன்றுகிறது? பார்ப்போம் வாங்க !

0
பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருப்புறம் . பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். இருவருக்குமே பசி என்பது பிரச்சினை தரும் ஒன்று.
பசி உணர்வு எப்படி தோன்றுகிறது? பார்ப்போம் வாங்க !
இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது. நமது ரத்தத்தில் சாதாரணமாக 80 இல் இருந்து 120 மில்லி கிராம் குளுகோஸ் இருக்க வேண்டும். 

இந்த குளுகோஸ் தான் உடலின் எல்லா பாகங்களு க்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையேடு குளுகோஸ் அளவை எடுத்துப் பார்த்தால் எல்லோரு க்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும்.

இதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுகோஸ் இருந்தால் அதை தேவை யில்லை என்ற நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றி விடும்.

இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுகோஸ் அளவு 80 - 90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும். 

ரத்தத்தில் குளுகோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகமாகும. 'காஸ்ட்ரின்' என்ற ஒரு ஹார்மோன் தோன்றும். இவை யெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் அவஸ்தை தான் பசி.
பசி உணர்வு எப்படி தோன்றுகிறது? பார்ப்போம் வாங்க !
குளுகோஸ் குறைவான ரத்தம் மூளைக்குப் போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்று கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்கு தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப் படுகிறது.

எதைப் பற்றியும் அதற்கு கவலை யில்லை. தனக்கு வேண்டிய பங்கு கச்சிதமாக வந்து சேர்ந்து விட வேண்டும். அதிகமான ரத்தம் மட்டு மல்லாமல் தரமான குளுகோஸ் நிறைந்த ரத்தமே வேண்டும்.

அப்படி கிடைக்காத போது மூளை தெரிவிக்கும் இந்த எதிர்ப்பு தான் லேசான மயக்கம், காதை அடைக்கிறது, கண் பஞ்சடைவது, போன்றவை . 

8 மணி நேரம் சாப்பிட வில்லை. தண்ணீர் கூட குடிக்க வில்லை என்றால் 'டி ஹைட்ரஜன் ' தொடங்கும்.
பசி உணர்வு எப்படி தோன்றுகிறது? பார்ப்போம் வாங்க !
அதனால் காதடைப்பு, மயக்கம் இன்னமும் அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர் களை இந்த குளுகோஸ் பிரச்சினை படாதப்பாடு படுத்தும். அதனால் தான் அவர்களால் பசியை தாங்க முடிவதில்லை .

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படு கிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். திருக்குர்ஆன் / ஸூரத்து அபஸ / 80 ; 24
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings