கடலூரில் தடுப்பு கட்டையில் பஸ் மோதி 26 பேர் காயம் !

0
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு ஒரு பஸ் புறப்பட்டது. புதுச்சேரி அரசுக்கு சொந்தமான அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் மோகன்ராஜ் ஓட்டிச் சென்றார். கண்டக்டர் மந்திர மூர்த்தி என்பவர் பணியில் இருந்தார்.
தடுப்புக்கட்டையில் பஸ் மோதல்


நள்ளிரவு கடலூர் இம்பீரியல் சாலையில் அந்த பஸ் வந்த போது, பிரபல ஜவுளிக்கடை முன்பு சாலையின் நடுவே அமைக்கப் பட்டிருந்த தடுப்புக் கட்டை மீது திடீரென மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. 

மேலும் பஸ்சில் பயணம் செய்த ராஜ்குமார் (வயது 47), புதுச்சேரி மணி, ஸ்டாலின், வேதாரண்யம் சந்திரா(58), தேவிகா (60), டிரைவர் மோகன்ராஜ், கண்டக்டர் மந்திரமூர்த்தி உள்பட 26 பேர் படுகாய மடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந் தவர்களை மீட்டு சிகிச்சைக் காக ஆம்புலன்சு மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இதில் ராஜ்குமார் உள்பட 11 பேர் மட்டும் உள் நோயாளியாக அனுமதிக் கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பாதிரிப் புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings