ஹைதராபாத்தில் மின்கம்பியை தொட்டதும் அசைவற்று நின்ற சிறுவன் !

0
ஹைதராபாத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அறுந்து விழுந்த மின்வயரை தொட்டதும் அசைவற்ற நிலையில் கீழே விழும் காட்சிகள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன. ஹைதாரபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் சிறுவன் ஒருவன் வழக்க போல விளையாடிக் கொண்டிருக்கி றான். 
அசைவற்று நின்ற சிறுவன் !


மக்கள் நடமாட்டம் நிறைந்த அப்பகுதியில் சிறுவனுக்கு அருகில் மற்ற சிறுவர்களும் விளையாடி க்கொண்டிரு கின்றனர். அங்கு ஓடி வந்த சிறுவன், அருகிலி ருக்கும் மின் விளக்குக் கம்பத்தை விளையாட்டாகத் தொடுகிறான். தொட்டவுடன் அப்படியே அசைவற்று சிறுவன் நிற்கும் காட்சிகள், காண்போரை உலுக்கச் செய்யும் வகையில் உள்ளது. 

கம்பத்தைப் பிடித்த சில நிமிடங்கள், உடலில் எந்தவித அசைவும் இல்லை. அப்படியே நிற்கிறான். ஒரு கையை மட்டும் கம்பத்தில் பிடித்த படி நின்று கொண்டிருக்கி றான். அருகிலிருந்த வர்கள் சிறுவனைக் கடந்து செல்கின்றனர். சில நிமிடங் களுக்குப் பிறகு, கம்பத்தி லிருந்து சிறுவனின் கை விடுபட, அப்படியே கீழே சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி யுள்ளன. 

சிறுவன் சரிவதைக் கண்டு அருகிலிருப் பவர்கள் பதற்றத்துடன் வந்து பார்த்த போது, அறுந்து விழுந்த மின் வயரை தெரியாமல் காலில் மிதித்தது தெரிய வந்தது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே 6 வயதான சிறுவன் உயிரிழந் துள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ராகவேந்திரா கூறுகையில், `சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் பின் கிழே விழுந்துள்ளான். இதைப் பார்த்து அங்கு வந்த செக்யூரிட்டி, சிறுவனைத் தொட்ட போது அவருக்கும் சிறிய அளவில் ஷாக் அடித்துள்ளது.


உடனே அருகிலிருந்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்றபோது, மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்' என்றார். சிறுவனின் தந்தை சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவர் சென்னையில் இருந்துள்ளார்.
சம்பவத்தை தெரிந்து கொண்ட அவர் பதறியடித்துக் கொண்டு ஹைதராபாத் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மின் ஊழியர்களின் அலட்சிய த்தின் காரணமாக இவ்வாறு நடந்திருக்க லாம் எனக் கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings