அதிமுக, பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை கசிந்த தகவல்கள் !

0
அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என ஒருபக்கம் அதிமுக பிரமுகர்கள் கூறி வந்தாலும் இன்னொரு பக்கம் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. 
அதிமுக, பாஜக தொகுதிப் பங்கீடு
மேலும் பாஜகவை கூட்டணியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையை சமாதானப் படுத்தும் வேலையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது 


இந்த நிலையில் பாஜக ஏழு தொகுதிகள் கேட்பதாக வும் அவை தென் சென்னை, கன்னியாகுமரி, கோவை, சிவகெங்கை , நெல்லை, நீலகிரி, திருச்சி ஆகிய தொகுதிகள் என்றும் செய்திகள் கசிந்துள்ளது. இதற்கு கிட்டத்தட்ட அதிமுக சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படு கிறது.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, சரத்குமார் கட்சி, புதிய தமிழகம், ஆகிய கட்சிகள் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

ஒருவேளை அதிமுக கூட்டணி யில் பாஜகவை சேர்க்க வில்லை என்றால் அதிமுகவை தனிமைப் படுத்தி விட்டு மீதிக்கட்சி களை வைத்து பாஜக தனிக்கூட்டணி அமைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings