குஜராத் பள்ளிகளில் ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் !

0
குஜராத் பள்ளிகளில் இன்று தொடங்கி இனி வகுப்பறைகளில் ஆசிரியர் வருகைப் பதிவேடு கணக்கெடுக்கும் போது மாணவர்கள் உள்ளேன் ஐயா என்பதற்குப் பதிலாக 


ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என்றே சொல்ல வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விதிமுறை அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளு க்கும் பொருந்து என அரசு சுற்றறிக்கை அனுப்பி யிருக்கிறது.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு குழந்தைகளும் இனி வருகைப் பதிவேடு சோதனையின் போது இப்படித் தான் பதில் சொல்ல வேண்டும் என ஆரம்ப் கல்வி, உயர் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்விக்கான கல்வி வாரியம் (GSHSEB) தெரிவித்தி ருக்கிறது.

இந்த முடிவு குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசின்ஹ் சூடாஸ்மாவால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தொண்டரை பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவு:


ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ஜோஷி என்ற வரலாற்று ஆசிரியரை அண்மையில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ( ஆர்.எஸ்.எஸ். -ஸின் மாணவர் அமைப்பு) அவரது சிறப்பான கல்வி சேவைக்காகப் பாரட்டியுள்ளது. 

சந்தீப் ஜோஷி தனது மாணவர்களை வருகைப் பதிவு எடுக்கும் போது ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் சொல்லப் பழக்கி யிருக்கிறார் என்ற தகவல் குஜராத் கல்வி அமைச்சரு க்குத் தெரிய  வந்துள்ளது.

சந்தீப் ஜோஷியின் தேசப்பற்றால் ஈர்க்கப்பட்டு, அவர் நடைமுறைப் படுத்திய பழக்கத்தை மாநிலம் முழுவதும் அமல் படுத்த சொல்லி யிருக்கிறார் குஜராத் கல்வி அமைச்சர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)