மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களை வெளியேற்ற தடை !

0
'அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர் களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத் தப்பட்டு உள்ளது.


தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப் பட்டன. 

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கி யுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கி யுள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித் துள்ளன. 

இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ண யிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர் களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப் படுகிறது. 

அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. 


அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக் கின்றன. கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. 

இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கை யுடன் நடந்து கொள்ள வேண்டும். 
அறியவும்
எந்த மாணவரு க்கும், டி.சி., கொடுத்து, கட்டாய மாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings