துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பதிலாக, வேறு வகையில் கலவரத்தை கட்டுப் படுத்தும் புதிய ரக துப்பாக்கியை, கும்பகோண த்தைச் சேர்ந்த இன்ஜினியர் கண்டு பிடித்துள்ளார்.
தஞ்சாவூர், கும்பகோண த்தைச் சேர்ந்தவர் சரவணன், 26. இவர் ரஷ்யாவில், 'அவனிக்ஸ்' என்ற தொழில்நுட்ப படிப்பில், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
நண்பர்களுடன் சேர்ந்து, பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு, புதிய தொழில் நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளை கண்டுபிடித்து வருகிறார்.
இந்நிலையில், ஓராண்டுக்கு முன், துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியான சம்பவம், சரவணன் மனதை பாதித்தது.
கலவரத்தின் போது உயிர் சேதம் இல்லாமல், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர, மூன்று மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு, 7 அடி நீளமுள்ள புதிய துப்பாக்கியை கண்டு பிடித்துள்ளார்.
சரவணன் கூறியதாவது:
இந்த துப்பாக்கியை கையாள்வது எளிது. இதில், உருண்டை வடிவில் உள்ள உருளை கிழங்கு, களிமண் ஆகிய வற்றை செலுத்தி, எலக்ட்ரானிக்
மற்றும் வாயு அழுத்தம் மூலம் இயக்கினால், உள்ளே உள்ள குண்டு, 500 மீட்டர் வரை வேகமாக சென்று, எதிரில் உள்ளவர்களை தாக்கும்.
இதனால், அந்த இடத்தில் வலிக்கும். உயிர் சேதாரமாகாது. ஒரு சில நாட்களில் சிகிச்சை மூலம் அந்த காயம் சரியாகும்.
அறியவும்
இந்த கண்டு பிடிப்பை மாநில அரசு, மத்திய பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


Thanks for Your Comments