பிரசவ செலவிற்காக நகை பறித்த கோவில்பட்டி வாலிபர் கைது !

0
நங்கநல்லூரில் மூதாட்டி யிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மனைவியின் பிரசவ செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் நண்பருடன் சேர்ந்து வழிப்பறி செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.


சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் ராஜம். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (67). சம்பவத்தன்று இவர், நங்கநல்லூர் ஸ்டேட்பேங் காலனியில் நடந்து சென்று கொண் டிருந்தார். 

அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி ஜெய லட்சுமியை கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தார். 

பின்னர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற தனது கூட்டாளி யுடன் தப்பிச் சென்று விட்டார்.  சமூக வலைத் தளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்த புகாரின்பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து புழுதி வாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (31) என்பவரை கைது செய்தனர்.

விசாரணை யில் இவர்தான் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதும், மூதாட்டியிடம் சங்கிலியை பறித்தது அவருடைய நண்பரான கோவில் பட்டியை சேர்ந்த கணேஷ் குமார்(27) என்பதும் தெரிந்தது. 

இந்தநிலையில் தலைமறை வாக இருந்த கணேஷ் குமாரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரிடம் கணேஷ் குமார் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது: 

எனது மனைவி கோவில் பட்டியில் உள்ள மருத்துவ மனையில் பிரசவத்துக் காக அனுமதி க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து தான் பிரசவம் பார்க்க வேண்டியது உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனைவியின் பிரசவ செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் எனது நண்பருடன் சேர்ந்து மூதாட்டி யிடம் வழிப்பறி செய்தேன். அந்த நகையை விற்று ரூ.1 லட்சம் கிடைத்தது. அதில் ரூ. 70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கோவில் பட்டிக்கு சென்றேன். 


மனைவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மேலும் செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் அதை வாங்க சென்னை வந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன். 

மேலும்
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை யடுத்து கைதான 2 பேரையும் போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings