பிரான்சில் பேக்கரியில் வெடி விபத்து 2 வீரர்கள் பலி; 47 பேர் காயம் !

0
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பேக்கரியில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலியாயினர். 47 பேர் காயம் அடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்தியப் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்று பயங்கர வெடிசத்தம் கேட்டது. 
அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பயங்கரமாக வெடித்தன. அதன் பின் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அதன் கண்ணாடிகள் சிதறி, அருகில் இருந்தவர் களை தாக்கியது. 

இதனால், பலரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. பேக்கரி கட்டிடத்தில் இருந்த பொருட்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் ஏராள மானோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
தீயணைப்பு, மீட்பு படையினர் 200 பேர் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர் களை ஜன்னல் வழியாக அவர்கள் மீட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் 2 பேர் தீயில் சிக்கி பலியாகினர். 
மொத்தம் 47 பேர் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்தனர். இவர்களில் 10 பேர் கவலைக் கிடமாக உள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்களில் இருந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அப்புறப் படுத்தப் பட்டனர். 

காஸ் சிலிண்டர் வெடிச்சத்தம் பயங்கரமாக இருந்ததால், தீவிரவாத தாக்குதல் நடக்கிறது என பலர் நினைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings