ஏழைகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் பொங்கல் பரிசு - உயர் நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தல் !

0
சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டை தாரர்களு க்கும் பொங்கலு க்கு ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதி க்கும்படி உத்தரவை மாற்றக் கோரும் அரசின் முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.


பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 

சத்திய நாரயணன், ராஜ மாணிக்கம் அமர்வு அனைத்துக் குடும்ப அட்டை க்கும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தர விட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை தொடங்கிய போது, 

அனைத்துக் குடும்ப அட்டை களுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க அனுமதிக்கக் கோரி வழக்கறிஞர் பால சுப்ரமணியம் முறையிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு மட்டுமே பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனத் திட்ட வட்டமாகத் தெரிவித்தனர். 
வேண்டுமானால் உச்ச நீதி மன்றத்தை நாடி மேல் முறையீடு செய்யலாம் எனக் காட்ட மாகத் தெரிவித்ததுடன் முறையீட்டை ஏற்க மறுத்தனர்.


பிற்பகலில் அரசு வழக்கறிஞர் மனோகர் ஆஜராகி, சர்க்கரை மட்டும் பெறும் அட்டை தாரர்களு க்கும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வகையில் முந்தைய உத்தரவை மாற்றக் கோரி முறை யிட்டார். 

முந்தைய உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். உத்தரவை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தால் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். 

அவசர வழக்காக ஏற்க முடியாது என்றும் மனு தாக்கல் செய்தால் விசாரணை க்கு வரும் போது எடுத்துக் கொள்வ தாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings