ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பு வாயு கொடுத்த வழக்கில் தீர்ப்பு !

0
சிகிச்சைக் காக வந்த பெண் ஒருவருக்கு ஆக்சிஜன் வாயு கொடுப்பதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு அளித்த காரணத்தால் பெண் மரண மடைந்த வழக்கில் 
பெண்னின் கணவருக்கு ரூபாய் 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்திர விட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ருக்மணி என்ற பெண் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி சிகிச்சைக் காக அனுமதிக் கப்பட்டார். 

அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் வாயு அளிப்பதற்கு பதிலாக சிரிக்கை வைக்கும் வாயு என அழைக்க ப்படும் நைட்ரச் ஆக்ஸைடு வாயுவை தவறுதலாக அளிக்கப் பட்டது. 

இதனால் அந்த பெண் சுய நினைவற்ற கோமா நிலையை அடைந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து 2012 மார்ச் மாதம் 4ஆம் தேதி அந்த பெண் இறந்து போனார். 

இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் கணேஷ் தனது மனைவியின் மரணத்திற் காகவும், இரண்டு குழந்தை களின் எதிர் காலத்திற்கா கவும் ரூபாய் 50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என 
நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நாங்கு வருடங்க ளாக இழுவையில் இருந்து வந்தது. தற்போது வழக்கின் தீர்ப்பு வெளியாகி யுள்ளது. 

அதில் தமிழ் நாடு சுகாதாரத் துறை பாதிக்கப்பட்ட ருக்மனியின் கணவர் கணேஷிற்கு ரூபாய் 28 லட்சத்தி முப்பத்தி ஏழாயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக் கப்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)