பெண்களை வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி !

0
மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கில் விடுதி உரிமை யாளர் சம்பத்ராஜ் (எ) சஞ்சீவி (48) கைது செய்யப்பட்டார்.
பெண்களை வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி !
ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்ததை அந்த வீடுதியில் தங்கி யிருந்த பெண்கள் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவு செய்து கண்டு பிடித்தனர்.

மேலும், இந்த வழக்கில், அவர் விடுதியில் தங்கி யிருந்த பெண்களை கிளுகிளுப் பாக காட்சி எடுக்க அதிநவீன தொழில் நுட்பத்தில் கூடிய வை-பை கேமரா பயன்படுத்தி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மகளிர் விடுதி:

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தவர் சஞ்சீவி. இந்த குடியிருப்பு உரிமை யாளர் தற்போது, வெளிநாட்டில் வசிக்கின்றார்.
இதற்கு மாத வாடகை யாக ரூ. 24 ஆயிரம் கொடுத் துள்ளார். மேலும், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடு த்துள்ளார். விடுதி 2 ஆயிரத்து 100 சதுர அடியில் 3 படுக்கை அறை கொண்டது. இதில் 7 பெண்கள் தங்கி யிருந்தனர்

மனைவி சித்தா மருத்துவர்:

இவரின் மனைவி சித்தா மருத்துவர். நோயாளி களுக்கு சித்தா மருத்துவம் பார்க்க படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீடுதியின் ஒரு அறையில் போட்டு இருந்தார்.
மேலும், அந்த பெண்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், ஒரு ஹாலை இவரின் மருத்துவ வேலைக்கு பயன்படுத்த அனுமதித்து இருந்தனர். பெண்கள் விடு திரும்பும் போது, இவர் அதற்கு முன் வெளியேறி விடுவார்.

பெண்களின் அழகு:

தங்கியிருந்த பெண்கள் அழகாக இருந்ததால், இவருக்கு அந்த பெண்களை மயக்க நினைத் துள்ளார். ஆனால் முடிய வில்லை. இதைத் தொடர்ந்து, நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில் நுட்பத்தை அறிந்துள்ளார்.
(nextPage)
ஆன் லைனில் நுணுக்கம்:
பெண்களின் அந்தரங்க காட்சிகளை எவ்வாறு படம் பிடிப்பது, அதற்கு எந்ததெந்த இடங்களில் கேமராக் களை பொறுத்த வேண்டும் என்றும் ஆன் லைனில் தெரிந்து கொண்டுள்ளார் 

சஞ்சீவி. அதன் பிறகு விடுதியில் குளியலறை, கழிப்பிடம், ஹால் என பல்வேறு இடங்களி லும் பொருத்தி யுள்ளார்.

கேமரா விலை எவ்வளவு?
தலா ரூ.2500 கொடுத்து, அதநவீன கேமராக்களை வாங்கி யுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், அந்த கேமராக்களில் காட்சி பதிவு ஆகாது. நடமாட்டம் இருந்தால் அது தானாக பதிவு செய்து கொள்ளும்.

ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு:
இவர் பொருத்தி யிருந்த ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு இருந்துள்ளது. இதனால் 3 அல்லது 4 நாட்களில் பராமரிப்பு பணி என்று பெண்களின் அறைக்கு என்று கார்டை எடுத்து விட்டு புதிய கார்டை பொறுத்தி விடுவார்.

வை-வை கேமரா:
ஒரு சில கேமராக்களில் வை-பை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்தி யுள்ளார். இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். 

அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள் இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்கு மூலத்தில் அவர் அளித்துள்ளார்.

மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராக் களை கண்டறிவது எப்படி?

தொழில்நுட்ப வளர்ச்சி சில விதங்களில் மக்களுக்கு நன்மையை விளை வித்தாலும், பல வழிகளில் தீமை களையும் விளை விக்கின்றது. 

ஆரம்பத்தில் சில தொழில் நுட்பங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பயன்பாடு அதிகரித்த வுடன் அதன் பின் விளைவுகள் வெளிப்படு கின்றன.

அந்த வகையில் கேமரா தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. 
தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமராக்களில் பல முன்னேற்ற ங்களை நாம் கடந்து வந்து விட்டோம்.

ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்து தற்போது கடுகளவு வரை கேமராக் களின் அளவு குறைந்து விட்ட நிலையில் அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக் கின்றது.

கேமரா அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் அதை எதிர் கொள்வது எப்படி என்றும்  அனைவரும் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க
(nextPage)
தேடுதல்
முதலில் உங்க இருப்பிட த்தில் இருக்கும் வினோத மான பொருட்களை கூர்ந்து கவனிக்கவும்

கவனம்
தேடுதலின் போது கவனமாக இருக்க வேண்டும், சில கேமராக்கள் செயல் படும் போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும்

இறுல்

அறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டறிவது சுலபமாகிறது.

கண்னாடி

இப்போ டார்ச்லைட் மூலம் அறையில் இருக்கும் கண்னாடி களில் பார்க்கவும்
பின்ஹோல் கேமரா
பின்ஹோல் கேமராக் களில் சிசிடி இருக்கும், அதனால் டைர்ச்லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கும்
(nextPage)
டிடெக்டர்
RF சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம்.

செல்போன்

மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராக் களை கண்டிறிய உங்க செல்போநையும் பயன் படுத்தலாம். 
உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், க்ளிக் சத்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருப்பதாக அர்த்தம்

ஓட்டை
உங்க அறையில் இருக்கும் சிறிய ஓட்டைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கலாம்

பொது இடம்
சில சமயங்களில் பெரிய கட்டிடங்களிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்

டிடெக்டர்
இணையங்களில் கிடைக்கும் வயர்லெஸ் கேமரா டிடெக்டர்களை பயன்படுத்தலாம், இதுவும் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)