இனி வரும் காலங்களில் சாலை விதிகளை மீறினால் அவ்வளவு தான் !

0
சாலை விதிகளை மதிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதில்லை. சாலையில் பயணிக்கும் 


பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவே இம்மாதிரி யான விதிகள் வகுக்கப் பட்டிருக்கின் றன. 

ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பயந்து விதிகளை மீறும் பலர் விபத்துகளில் சிக்குவதை நாம் பார்த்திருக் கிறோம்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சாலை விதிகளை மதித்தல் நேர விரயம் என்னும் தவறான மனநிலை பலரிடத்தில் உள்ளது. 

சிறிய சிறிய விதிமீறல்கள் கூட வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்தக் கூடும். 

இதைத் தடுக்கவே போக்கு வரத்துத் துறையால் கொண்டு வரப்பட இருக்கிறது ஸ்மார்ட் லைசன்ஸ் (Smart License) திட்டம்.

ஸ்மார்ட் லைசன்ஸ்

இனி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப் பிக்கும் அனைவரு க்கும் ஸ்மார்ட் லைசன்ஸ் 

அளிக்கப் படும் என போக்கு வரத்துத் துறையால் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதில் சிப் (Chip) போன்ற ஸ்மார்ட் கார்டு பொருத்தப் பட்டிருக்கும். 

வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனரின் தகவல்கள் போன்றவை அதில் பதிவு செய்யப் பட்டிருக்கும். 


இந்த ஸ்மார்ட் கார்டு போக்கு வரத்துத்துக் காவல் துறையுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

குற்றப் பத்திரிக்கை

இனிவரும் காலங்களில் இந்த ஸ்மார்ட் லைசன்ஸ் மூலம் சாலை விதிமீறல் களைக் குறைக்க முடியும் என்கின்றனர் காவலர்கள். 

சாலை விதிகளை மீறும் ஒருவரின் லைசன்ஸ் காவல் துறை கட்டுப் பாட்டு அறையின் கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும். 

அதன் மூலம் ஓட்டுநர் புரியும் விதிமீறல் குறித்த விவரங் களைக் கணினி மூலமாக ஸ்மார்ட் கார்டுக்கு அனுப்புவார்கள். 

அதன் பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப் பட்டும்.

குறையுமா குற்றங்கள்?

யாரும் கவனிக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தான் பலரை விதிமீறல் களைச் செய்ய வைக்கிறது. 


மேலும், சிறு குற்றங்கள் தானே என்ற அலட்சிய மும் இதில் ஈடுபட வைக்கிறது. 

இம்மாதிரி யான திட்டங்கள் ஓட்டுனர் களுக்கு விழிப்பு ணர்வை அளிக்கும். 

மேலும், தவறுகள் அனைத்தும் பதிவு செய்யப் படுவதால் லஞ்சம் தவிர்க்கப் படும். 
வாகன ஓட்டிகளைத் தொடர்ந்து கண்காணிப் பதன் மூலம் ஓட்டுனர் களின் 

தவறுகள் குறையும் என்கிறார்கள் போக்கு வரத்துத் துறை ஆய்வாளர்கள். 

சாலை விதிகள் நமது நல்வாழ்விற் கானவை என்கிற புரிதலே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)