வாகனத்தை திருடும் போது சிசிடிவி கேமராவில் கொள்ளை கும்பல் !

0
சென்னையில் இருசக்கர வாகனத்தை திருட வந்தவர்கள், சிசிடிவி கேமராவில் தாம் பதிவாகாமல் தப்பிக்க எண்ணி, கேமராவை வேறு பக்கமாக திருப்ப முயன்ற காட்சிகளும், பதிவாகி யுள்ளன.
ஐஸ் ஹவுஸ் - அஜி ஷேக் உசேன் தெருவில் நிறுத்தப் பட்டிருந்த ஹோண்டா டியோ இருசக்கர வாகனம், கடந்த வாரம் திருடு போனது. 

இது குறித்த புகாரில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஐஸ் ஹவுஸ் போலீசார் ஆய்வு செய்தனர்.


அதில், நள்ளிரவில் 4 பேர் இருசக்கர வாகனத்தை திருட முயல்கின்றனர். அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்த அவர்கள், கேமராவை வேறு பக்கமாக திருப்ப முயல்கின்றனர்.

கேமராவை வானத்தை நோக்கி திருப்பி விட்டதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் துணிச்சலாக இருசக்கர வாகனத்தை திருடும் முனைப்பில் ஈடுபடுகின்றனர். 

பின்னர் அங்கிருந்த ஹோண்டா டியோ வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து செல்கின்றனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, இருசக்கர வாகனத்தை திருடிய வர்களை கைது செய்ய ஐஸ் ஹவுஸ் போலீசார் முயன்று வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings