பனி மலைகளால் ஆன புது கிரகம் !

0
சூரியக் குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங் களைக் கண்டு பிடிப்பதில் 


பெரும் பான்மையான வளர்ந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் சூரியனில் இருந்து 6 ஒளி யாண்டுகள் தூரத்தில் உள்ள புது கிரகம் ஒன்று நாசாவால் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. 

Barnard என்னும் நட்சத்திர த்தை வலம் வரும் இந்த கிரகத்தில் பனி மலைகள் இருப்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்திருக் கிறது.

ஒளியாண்டு என்பது என்ன ?

ஒளி ஓராண்டில் கடக்கும் தொலைவே ஒளியாண்டு எனப்படு கிறது. 

ஒளியின் வேகம் வினாடிக்கு = 186000 மைல்கள்

பனி கிரகம்

இதுவரை மனிதர்கள் வாழ்வதற்கு ஓரளவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை யினைப் பெற்ற கோள்கள் இரண்டு மட்டுமே கண்டு பிடிக்கப் பட்டிருக்கி ன்றன. 


ஒன்று நமது சூரியக் குடும்பத்தின் அருகே உள்ள நட்சத்திரக் கூட்டமான ப்ராக்சிமா செண்டாரியை சுற்றி வரும் ப்ராக்சிமா செண்டாரி B கோள். 

மற்றொன்று இப்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கும் Barnard B கோள். 

Barnard நட்சத்திர த்தை இந்தக் கோள் சுற்றி வருதால் இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது.

சூரியனி லிருந்து புதன் கிரகம் வரை உள்ள தொலைவும் 
Barnard நட்சத்திரத் திலிருந்து Barnard B அமைந் திருக்கும் தொலைவும் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். 

பூமியை விட எடை குறைந்த இந்தப் புதிய கோள் முழுவதும் பனி மலைகள் உறைந்து போய் காணப் படுகிறது. 

சராசரி வெப்பநிலை – 274 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.


Barnard நட்சத்திரம்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரே ஒரு தனித்திரு க்கும் நட்சத்திரம் Barnard மட்டும் தான். 

(மற்றவை எல்லாம் பெரும் பாலும் நட்சத்திரக் கூட்டங் களாகவே இருக்கும்). 

அமெரிக்கா வின் புகழ் பெற்ற விண்வெளித் துறை ஆராய்ச்சி யாளரான Edward Emerson Barnard என்ப வற்றின் 

நினைவாக அந்த நட்சத்திர த்திற்கு Barnard எனப் பெயரிடப் பட்டுள்ளது. 

சூரியனி லிருந்து வெளிப்படும் கதிர்களில் 0.4 அளவுள்ள ஒளி இந்த நட்சத்திர த்தை சென்றடை கிறது. 
பூமியின் மீதுபடும் சூரிய ஒளியில் இது 2 % ஆகும். சூரியனை விடக் குளிர்ந்த மற்றும் 

நிறை குறைவான நட்சத்திரம் இது என்பதால் இதனால் ஒளியினைப் பிரதிபலிக்க முடியாது.


நாசாவின் வெளிப்புற கிரகத் தேடல்களு க்கென்று அனுப்பப் பட்ட WFIRST (Wide Field Infrared Survey Telescope) தொலை நோக்கி 

இந்தப் புதிய கோளினைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. 

மனித குடியேற்றத் திற்கான சாத்தியக் கூறுகளை இந்த தொலை நோக்கி ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும். 

மனித குலத்தின் எதிர்கால வாழ்விடத் தேடல்களின் ஒரு புது நம்பிக்கை இந்த Barnard B கிரகம் எனலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)