இந்திய அரசியல் வரலாற்றில் மீண்டும் எழும் ராமர் அரசியல் !

0
இந்திய அரசியல் வரலாற்றில் காவி வண்ணத் தால் பூசப்பட்ட கறுப்பு நாள் 1992 டிசம்பர் 6. 
ஐந்து நூற்றாண்டு களாய் இருந்த பாபர் மசூதி, ‘ராமர் பிறந்த இடம்’ என்று சொல்லி 

இந்துத்துவக் கரசேவகர் களால் இடிக்கப் பட்ட நாள். பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியைப் 

பிடிக்கு மளவுக்கு வளர்ந்த தற்கு உதவியதும் ராமர் கோயில் பிரச்னை தான். 


எப்போ தெல்லாம் பா.ஜ.க-வுக்கு அரசியல் செல்வாக்கு சரிகிறதோ, அப்போ தெல்லாம் ராமரைக் கையிலெடு க்கும் பா.ஜ.க. 

இப்போது ‘ராமர் கோயில்’ பிரச்னையைக் கையி லெடுத்திருப் பவர்கள் பா.ஜ.க தவிர்த்த சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ சக்திகள்.

ராமர் கோயில் பிரச்னை என்பது நூற்றாண் டுகள் கடந்தது. 

1853-ம் ஆண்டே ராமர் பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை யின் விளைவாக 

இந்துக் களுக்கும் முஸ்லிம் களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப் பட்டனர். 

பாபர் மசூதி இடிக்கப் பட்டது ஒரு டிசம்பரில் என்றால், அதற்கான அரசியல் விதை அழுத்தமாக ஊன்றப் பட்டதும் ஒரு டிசம்பரில் தான்.

1949, டிசம்பர் 23 இரவில் குரு அபிராம்தாஸ் என்னும் இந்து சாமியார், பாபர் மசூதிக்குள் புகுந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளை வைத்தார். 

அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அதுபற்றி அறிந்ததும் பதறிப் போனார். 

உத்தரப் பிரதேச முதல்வர் கோவிந்த் வல்லப பந்துக்கு எழுதிய கடிதத்தில், 

‘மோசமான பின் விளைவு களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதார ணம் அயோத்தியில் நடந்துள்ளது’

என்று வருத்த த்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் அயோத்திப் பிரச்னையில் ஆர்வம் காட்டினார். 

ஆனால், அயோத்தி யில் இருந்த பாபா ராகவதாஸ் போன்ற காங்கிரஸ் காரர்களே 

வாக்கு அரசியலுக் காக ராமர் கோயில் பிரச்னையைப் பயன்படுத்திக் கொண்டனர். 

தாத்தாவின் அரசியல் நிலைப் பாட்டுக்கு விரோதமாக, ராஜீவ்காந்தி காலத்தில் 

இந்து க்களும் சென்று வழி படுவதற்கு வசதியாக, பாபர் மசூதிக் கதவுகள் திறந்து விடப்பட்டன. 

மசூதி அருகே இந்துக்கோயில் கட்டவும் அனுமதி அளித்தது ராஜீவ் அரசு.

1983ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் தான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்தது. 

அதைத் தன் தேர்தல் அரசியலுக் காகக் கையிலெடு த்தது பாரதிய ஜனதா கட்சி. 


பா.ஜ.க-வின் ஆதரவுடன் அமைந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது தான் அத்வானி ரத யாத்திரையை ஆரம்பித்தார். 

அதே தேசிய முன்னணி யில் இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரில் ரத யாத்திரையைத் 

தடுத்து நிறுத்தி யதுடன் அத்வானியைக் கைது செய்யவும் உத்தர விட்டார். 
ராமர் பிரச்னையைக் காரணம் காட்டி, பா.ஜ.க. தன் ஆதரவை விலக்கிக் கொள்ள வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. 

‘மண்டல் கமிஷன் பரிந்துரை களை அமலாக்கு வதில் வி.பி.சிங் உறுதியாக 

இருந்ததும் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க முக்கிய மான காரணம். 

அதற்கு ரத யாத்திரையை ஒரு சாக்காகக் காட்டிக் கொண்டனர்’ என்ற விமர்சனங் களும் உண்டு. 

ராஜீவ் மரணத்து க்குப் பிறகு மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி, மாநிலத்தில் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் ஆட்சி. 

டிசம்பர் 6, பகல் 12.15 மணிக்கு கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தனர்.

ராமர் கோயில் பிரச்னையால் இந்தியா சந்தித்த இழப்புகள் ஏராளம். 1983-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் 

ராமர் கோயில் கட்டுவதற் காக இயக்கம் தொடங்கிய போது நடந்த கலவரங் களில் 500 பேர் இறந்தனர். 

அத்வானி ரத யாத்திரையை அறிவித்த செப்டம்பர் 1-ம் தேதிக்கும் நவம்பர் 20-க்கும் இடை யிலான காலத்தில், 

இந்தியா முழுவதுமான 116 வகுப்புக் கலவரங் களில் இறந்தவர் களின் எண்ணிக்கை 564. 

அயோத்தி அமைந்தி ருக்கும் உத்தரப் பிரதேசத் தில் இறந்தவர்கள் மட்டும் 224. 

பாபர் மசூதி இடிக்கப் பட்டவுடன் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. 


ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப் பட்டது. அன்று ஒரே நாளில், 233 பேர் பலியா னார்கள். 

அதிக பட்சமாக மகாராஷ்டிரா வில் 68 பேர் கொல்லப் பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு இந்தியாவின் முகத்தையே மாற்றி யமைத்தது. இந்துக் களுக்கும் 

முஸ்லிம் களுக்கும் இடையில் ஆழமான விரிசல் வேரூன்றியது. 

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்தே இந்தியாவில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் உருவாகின. 

குண்டு வெடிப்புகள் நடந்தன. ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதி யாக இருப்பாரோ என்று சந்தேகிக்கப் பட்டனர். 

பெரு நகரங்களில் முஸ்லிம் களுக்கு வீடுகள் மறுக்கப் பட்டன. 

தாடி வைத்தவர்கள், குல்லா அணிந்த வர்கள், பர்தா அணிந் தவர்கள் எப்போது வேண்டு மானாலும் விசாரணை க்கு உள்ளாக்கப் பட்டனர். 

இந்தக் காயங்கள் முழுவதுமாக ஆறவில்லை என்றாலும் இப்போது தான் அதன் தழும்புகள் கொஞ்சம் மறையத் தொடங்கி யிருக்கின்றன. 

இப்போது மீண்டும் ராமர் அரசியலைக் கையிலெடுத் திருக்கிறார் கள் இந்துத்துவ வாதிகள்.

பாபர் மசூதி இடிக்கப் பட்டதை யொட்டி, மத்திய அரசால் லிபரான் கமிஷன் அமைக்கப் பட்டது.

2009-ல் லிபரான் கமிஷன் தன் அறிக்கையை அப்போதைய மன் மோகன்சிங் அரசிடம் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கை யில் குற்றம் சாட்டப் பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி 

போன்றவ ர்கள் மீது இன்று வரை எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை. 

2010 செப்டம்பரில் அயோத்தி பிரச்னை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம், 

‘சர்ச்சைக் குரிய 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டி, 


இந்து சாமியார் களின் அமைப்பான ‘நிர்மோகி அகடா’ அமைப்பு, இந்து மகா சபை ஆகிய வற்றிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தீர்ப்பளி த்தது. 

ஆனால் இந்தத் தீர்ப்பை இந்துத்துவ வாதிகள், முஸ்லிம்கள் என இருதரப்பும் ஏற்றுக் கொள்ளா ததால் மேல்முறையீடு செய்யப் பட்டது.

பாபர் மசூதி பிரச்னை இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், நாடாளு மன்றத் தேர்தலு க்கு 
இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் ‘ராமர் கோயிலைக் கட்டுவதற்கு 

மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்’ என்று இந்துத்துவ வாதிகள் கலகத்தைத் தொடங்கி யுள்ளனர். 

சமீபத்தில் ராமர் கோயில் கட்டுவதற் காக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு 

நடத்திய பேரணியில் லட்சக் கணக்கான பேர் கலந்து கொண்டனர். 

“2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ‘ராமர் கோயில் கட்டப்படும்’ என்று 

பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்ததே, இப்போது ஏன் அவசர சட்டம் கொண்டு வர மறுக்கிறது? 

பொய்யான வாக்குறு தியை அளித்ததற் காக மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” 

என்று கடுமையாக விமர்சித்தார் சிவசேனா வின் தலைவர் உத்தவ் தாக்கரே.


இது தேர்தலுக் காக முன்னெழுப் பப்படும் அரசியல் நாடகமா அல்லது மீண்டும் ரத்த ஆற்றை ஓடவைப் பதற்கான ஒத்திகையா, 

இது பா.ஜ.க. அரசுக்கு இந்துத்துவ வாதிகள் கொடுக்கும் நெருக்கடியா அல்லது 

பா.ஜ.க-வும் பின்னணி யில் இருந்து இந்த நாடகத்தை இயக்குகி றதா என்ற கேள்விகள் எழுகின்றன. 

ஏனெனில், உத்தரப் பிரதேசத் தில் சரயு நதிக்கரை யில் 221 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை 

அமைக்கப் படும் என்று அறிவித்தி ருக்கிறார் உத்தரப் பிரதேச பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

சமீபத்தில் தான் ‘உலகிலேயே உயரமான சிலை’ என்று மோடியால் குஜராத்தில் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை திறந்து வைக்கப் பட்டது. 

இந்தியா வின் அடை யாளமாக காந்தியும் நேருவும் இருப்பதை விரும்பாத 

 மோடி, பதவிக்கு வந்ததி லிருந்தே பல முயற்சி களை மேற் கொண்டார். 

அதில் பிரமாண்ட முயற்சி வல்லபபாய் பட்டேல் சிலை. 

 பட்டேல் இந்துத்துவச் சார்புடை யவர் என்பதும் காந்தி காலத்தி லேயே பட்டேல் தலைமை யிலான 

வலதுசாரி அணிக்கும் நேருவு க்கும் பனிப்போர் இருந்ததும் பட்டேல் மறைவுக்குப் பின் 

நேரு காங்கிரஸைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததையும் வரலாற்றை அறிந்த வர்கள் அறிவார்கள்.

மோடி இந்தியா வின் அடை யாளமாக பட்டேலை நிறுத்து வதைக் கூட, இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட வர்கள் ஏற்றுக் கொள்வார்கள். 

ஆனால், யோகி ஆதித்ய நாத்தோ பட்டேலை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க 

முயல்வதன் மூலம் ‘இந்தியாவின் அடையாளம் ராமர் தான்’ என்று நிறுவப் பார்க்கிறார். 


இது முற்றிலும் ஆபத்தானது. மதச்சார் பின்மை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் 

வலுவான அடிப்படை களில் ஒன்று. ஒரு மதச்சார் பற்ற அரசாங்கம், மக்களின் வரிப் பணத்தில் 
ஒரு மதக்கடவு ளுக்குப் பிரமாண்ட சிலை அமைத்து, அதைத் தேசத்தின் அடை யாளமாக 

சர்வதேச அரங்கில் நிறுவுவது, நம் ஜனநாயக த்துக்கு விடப்பட்ட சவால்.


ராமர், கோயில் களிலும் அவர் பக்தர்கள் நெஞ்சிலும் குடியிருப்பதே அனைவரு க்கும் நலம் பயக்கும். 

தேர்தல் அரசியலுக் காகவும் மதவெறியை ஊட்டு வதற்கா கவும் ராமரை வீதிக்கு இ

ழுப்பது ராமருக்கும் நல்லதல்ல; இந்தியாவு க்கும் நல்லதல்ல.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings