கோடிக்கணக்கில் பணம்... சட்ட விரோத கடத்தல் சிக்கியது எப்படி?

0
தூத்துக்குடி யில் இருந்து இலங்கைக்கு கடத்து வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த தடை செய்யப்பட்ட 1,500 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோடிக்கணக்கில் பணம்... சட்ட விரோத கடத்தல் சிக்கியது எப்படி?
வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா பகுதி பாதுகாக்க ப்பட்ட உயிர்க் கோளப் பகுதியாகும். 

உலகில் உள்ள பவளப் பாறைகளில் 17 சதவிகிதம் பவளப் பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால் பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு காணப் படுகின்றன.

இந்திய கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக் கப்பட்ட கடல் பூங்காவாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

இங்கு கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை, பால்சுறா, சங்குவகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங் களைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப் பட்டிருந் தாலும், கடல் அட்டைகளை விற்பனை செய்வதால் அதிக லாபத்துடன் பணம் கொட்டுவதால் 

தொடர்ச்சி யாக சட்ட விரோதமாக வெளி நாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சி யாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத் துறை, கடலோரப் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வந்தாலும், கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி கீழ அரசரடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படை யில், அப்பகுதில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் வன உயிரின பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோதமாக தடைசெய்யபட்ட 1,500 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். 

இதை யடுத்து பதப்படுத் தப்பட்டு உலர வைக்கப்பட்ட நிலையில் உள்ள கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர் பாக நாகூர் மைதீன், முகைதீன், அருணாசலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings