விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் !

0
உடலை நிலை குலைய வைக்கும் விண்வெளி !

அம்மா நிலாச்சோறு ஊட்டும் போது நாம் அனைவருமே நிலவுக்குச் செல்ல ஆசைப் பட்டிருப்போம். விண்வெளி பற்றி நிச்சயம் கனவுகள் கண்டிருப்போம். 
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் !
விரிந்து கிடக்கும் இருள் வானத்தின் விண்மீன்களை எண்ணித் தோற்றிரு ப்போம். விண்வெளிக்குப் போக வேண்டும் என்றும் ஆசை வந்திருக்கு மல்லவா? 
ஆசையும் விடா முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் தான். சரி, நமது சிறு வயது ஆதர்சமாக இருந்த விண்வெளி வீரர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பற்றித் தெரிந்தால் அதிர்ந்தே போய் விடுவீர்கள்.

கடும் பயிற்சி

வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாடுகள் அந்த வீரர்களுக்கு கடும் பயிற்சிகளை அளிக்கும். விண்வெளி யில் உள்ள நிலைமை களுக்கு ஏற்றபடி புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் பயிற்சிகள் நடைபெறும். 

அதிவேக பயணம், சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுத்தல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். ஆனால் விண்வெளி நாம் நினைத்தது போல எப்போதும் இருக்காது. 
சரி நீங்கள் விண்வெளி க்குப் பயணிக்கி றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினை ராக்கெட்டின் வேகம்.
அறிந்து தெளிக !!

இதுவரை 40 நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான வீரர்கள் விண்வெளி க்குச் சென்றிருக் கிறார்கள். ஆனால் மூன்று நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது.

ராக்கெட் வேகம்

வீரர்கள் அனைவரும் ராக்கெட்டின் மூக்குப் பகுதியில் இருப்பீர்கள். வினாடிக்கு 7.9 கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் பயணிக்கும். 

அதிர்வுகள் ராக்கெட்டின் உள்ளறையில் ஓரளவுக்குத் தடுக்கப் பட்டிருந்தா லும் வேகத்தை நீங்கள் உணர்வீர்கள். 
பூமியின் ஈர்ப்புப் பரப்பில் இருந்து வெளியேறி யவுடன் வாந்தி, மயக்கம், கடுமையான தலைவலி இருக்கும். முதல் இரண்டு நாட்கள் இதைச் சந்தித்தே ஆகவேண்டும்.
பறவைக் கால்கள்

அடுத்ததாக உடம்பில் உள்ள நீர்மம் முழுவதும் தலை நோக்கிப் பாயும். மூக்கடைப்பு ஏற்பட்டு முகம் வீங்கும். தலை மிகக் குளிர்ச்சி யாக இருப்பதுபோல் உணர்வீர்கள். 

இரத்த ஓட்டம் தலை நோக்கி இருப்பதால் கால்கள் இலகுவாக இருக்கும். அதனை பறவைக் கால்கள் என்பார்கள்.
நொறுங்கும் எலும்புகள்

எலும்புகளில் உள்ள கால்சியம் அனைத்தும் இரத்தத்தில் கரைந்து கழிவாக வெளியேறி விடும். இதனால் எலும்பு வலுவற்றதாக ஆகிவிடும். 
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் !
அந்த நிலையில் சிறிய மோதல்கள் கூட எலும்புகளை நொறுக்கி விடும். இதனைத் தவிர்க்க உடற்பயிற்சி மிக அவசியம். இதற்காகவே ட்ரெட் மில் கொடுக்கப் பட்டிருக்கும்.

100 தும்மல்கள்

தூசுக்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டே இருக்கும். அவை எளிதில் வீரர்களின் நாசிக்களில் நுழைந்து விடும். 
இதனால் தான் விண்வெளியில் இருக்கும் வீரர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக நூறு தும்மல்கள் போடுகிறார் களாம்.

பூமிக்குத் திரும்பிய உடனும் தீவிர பரிசோதனை யிலேயே வீரர்கள் வைக்கப் படுவர். உடல் நிலை சரியாக சிலருக்கு 3 மாதங்கள் கூட ஆகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)