நம்மை சிரிக்க வைக்கும் வாயு தெரியுமா? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

நம்மை சிரிக்க வைக்கும் வாயு தெரியுமா?

சிரிப்பு தான் நம்முடைய வாழ்க்கையை சந்தோசமாக வைப்பது . ஆனால் அந்த சிரிப்பு இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் மட்டுமே மிஞ்சும் . இந்த சிரிப்பு மனிதனின் பல நோய்களை குணமாக்குகிறது.   
நம்மை சிரிக்க வைக்கும் வாயு
இந்த சிரிப்பை செயற்கையாக வரவழைக்க முடியுமா அதைப்பற்றி இந்த செய்தியில் காண்போம்.... 

சிரிப்பு வாயு என்று அழைக்கப்படுவது நைட்ரஸ் ஆக்சைடு. இந்த நைட்ரஸ் ஆக்சைட் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்.  இது Laughing Gas என்று அழைக்கப்படுகிறது . 

1772 ஆம் ஆண்டு Joseph Priestley என்பவர் இந்த நைட்ரஸ் ஆக்சைடை க‌ண்டுபிடித்து, அதற்கு பெய‌ரையும் வைத்து விட்டார்.. ஆனால் இது வித்தியாசமான பண்பினைக் கொண்டிருந்ததால் இதனை யாரும் பயன்படுத்தவில்லை.  

பிறகு பதினெட்டு வ‌ருட‌ங்க‌ள் அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஹ‌ம்ப்ரி டேவி(Humpry Davy) என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து சேர்ந்து இதை சோதனை செய்து பார்க்க நினைத்தார்கள். 

வழக்கமாக எலி, தவளைகளை சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் "எங்களை வைத்தே பரிசோதித்துக் கொள்கிறோம்" என அறிவித்தார்கள்.

பின்பு 1844 இல் ஒரேஸ் வெலர் என்ற பல் மருத்துவர் இதனை மயக்க மருந்தாக பயன்படுத்தினார் அதன் பிறகு நைட்ரஸ் ஆக்சைடு மருத்துவதுறையில் பயன்பாட்டிற்கு வந்தது.  

இந்த வாயுவை மனிதன் நுகரும் போது ரத்தத்தில் கலந்து உடனே மூளையை தாக்குகிறது.  இதன் விளைவாக தற்காலிக மயக்கம், கிளர்ச்சி, ஒருவித பரவச நிலையை இந்த வாயு ஏற்படுத்துகிறது . 

மேலும் இது சிரிப்பை வரவழைக்கிறது . இதனாலேயே பலர் இந்த வாயுவையும் நுகர்ந்தவுடன் அதிக அளவில் சிரிக்கிறார்கள். ஆனாலும் இந்த வாயு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

சிலருக்கு அரிப்பு, சிலருக்கு தலைவலி, சிலருக்கு மாயத்தோற்றம் என ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான விளைவுகளைக் காட்டுகிறது.  இதனால் இவர்கள் கீழே விழுவதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  

நைட்ரஸ் ஆக்சைடு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?

இந்த வாயுவினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் இந்த வாயுவை நுகர்ந்த உடனே ஏற்பட்டு சில நொடிகளில் நீங்கி விடும்.  மேலும் இந்த வாயுவை அடிக்கடி நுகர்ந்தால் விளைவுகள் அதிகமாக இருக்கும். 
நைட்ரஸ் ஆக்சைடின் விளைவ
இந்த நைட்ரஸ் ஆக்சைடு பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பல் மருத்துவம் போன்றவற்றில் மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.   
ஆனால் தூய நைட்ரஸ் ஆக்சைட் அபாயகரமானது அதனால் நைட்ரஸ் ஆக்சைடையும், ஆக்சிஜனையும் கலவையாக கலந்து பயன்படுத்தப்படுகிறது. 

இந்த நைட்ரஸ் ஆக்சைடு ராக்கெட் தொழில் நுட்பத்திலும் எந்திரங்களின் Efficiency -யை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  

இதனை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் நுரையீரலில் உள்ள காற்றினை அப்புறப்படுத்தி ரத்தம் மற்றும் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை தடுக்கிறது.  

இதனால் இந்த நைட்ரஸ் ஆக்சைடு உடலில் எதிர்ப்பு சக்தியை தாமதப்படுத்துகிறது.  ஆனால் நுரையீரல் மட்டும் எப்பொழுதும் போல் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது.  

ஆனால் அவரைப் பார்க்கும் போது சாதாரணமாகவே இருப்பார்,  இந்த வாயு அவரின் பதட்டத்தை குறைப்பதால் அவரால் இதனை எதிர்த்து செயல்பட முடியாமல் போகிறது.  

வைட்டமின் B12 செயல்
வைட்டமின் B12 செயல்
இதன் விளைவாக அவர் முதலில் உணர்வை இழந்து பின்பு மூளைச் சேதம் அடைந்து மரணம் அடைகிறார்.  இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் அவரின் உடலில் உள்ள வைட்டமின் B12 செயல் இழந்து விடுகிறது.  

வைட்டமின் B12 மனிதனின் டிஎன்ஏவை உருவாக்கவும் மற்றும் நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் அவசியமாக தேவைப்படுவது. மேலும் இது மனிதனுக்கு ரத்த சோகையையும் ஏற்படுத்துகிறது.  

நம்மில் பல பேருக்கும் தெரியாத விஷயம் காற்றில் கூட நைட்ரஸ் ஆக்சைடு இருக்கிறது எப்படி என்றால் சாலையில் செல்லும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இந்த நைட்ரஸ் ஆக்சைட் இருக்கிறது. 

இதனால் காற்றில் ஆக்சிஜனுடன் நைட்ரஜனும் அதிக அளவில் இருக்கிறது வாகனத்தில் உள்ள எரிபொருள் எரியும் பொழுது NO, NO2, NO3 N2O போன்ற வாயுக்கள் உருவாகிறது.  

இவை ஓசோன் மண்டலத்தை அதிகமாக பாதிக்கிறது இதன் காரணமாகவே இந்த அரசு BS6 வாகனத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நைட்ரஸ் ஆக்சைடின் பயன்கள்
நைட்ரஸ் ஆக்சைடின் பயன்கள் என்ன?

இந்த நைட்ரஸ் ஆக்சைடின் தன்மையையும் விளைவுகளையும் அறிந்து இதனை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சரியான இடத்தில் இதனை பயன்படுத்த வேண்டும்.  

இதனை விளையாட்டாக பயன்படுத்தும் போது விளைவுகள் அதிகமாக இருக்கும்.  ஆனால் இதனை அடிக்கடி பயன்படுத்தினால் மீண்டும் மீண்டும் இதனை பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இதை எப்ப‌டித் த‌யாரிக்கிறார்க‌ள் 
எப்ப‌டித் த‌யாரிக்கிறார்க‌ள்
அமோனியம் நைட்ரேட்டை கொதிக்க‌ வைக்கும் போது நைட்ர‌ஜ‌ன், நீராவி, அமோனிய‌ம் நைட்ரேட் புகை ஆகியவற்றோடு சேர்ந்து நைட்ர‌ஸ் ஆக்சைடும் வெளிவ‌ரும். 

நைட்ரஸ் ஆக்சைடுடன் வெவ்வேறு 'பாஸ்பேட்' க‌ளைச் சேர்த்து சுத்த‌மாக்குவார்க‌ள். இந்த‌ நிக‌ழ்வு கிட்ட‌த்த‌ட்ட‌ 240 டிகிரி செல்சிய‌ஸில் ந‌டைபெறும். 

இந்த‌ வெப்ப‌நிலை கொஞ்சம் அதிகமானாலும் கூட‌ வெப்ப‌ வெளியீட்டு நிக‌ழ்வு(exothermic) தொட‌ங்கி விடும். இந்த வாயு த‌யாரிப்பில் வெப்ப‌நிலையை சீரான‌ அளவில் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து என்பதுதான் சிக்க‌ல் நிறைந்தது. 

கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலோ அல்லது கட்டுப்படுத்தா விட்டாலோ பெரிய‌ "தீபாவ‌ளி"க்கான‌ வாய்ப்புகள் உண்டாகின்றன‌. 

ஒஹ‌யோ வேதியிய‌ல் விப‌த்து(1966), டெல்வேர் வேதியியல் விபத்து(1977)க்கள் இந்த சிரிப்பூட்டும் வாயு தயாரிக்கும் போது நிகழ்ந்வைதான். 

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த விபத்துகளின் வீரியம் பற்றி இன்னமும் கூட அலறிக் கொண்டிருக்கிறார்கள். 

இறுதியாக இதனைப்பற்றி

நைட்ர‌ஸ் ஆக்சைடு ஓஸோனில் ஓட்டை விழுவ‌த‌ற்கான‌ முக்கிய‌ கார‌ண‌ம். கார்ப‌ன் டை ஆக்ஸைடு புவி வெப்ப‌த்தில் உருவாக்கும் விளைவுக‌ளை போல பல‌ ம‌ட‌ங்கு விளைவுக‌ளை நைட்ர‌ஸ் ஆக்சைடு உருவாக்குகிற‌து.

அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் நைட்ரஸ் ஆக்சைடு உட்கொள்வ‌து த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து. எனவே மாணவர்களே உங்கள் பள்ளியில் இந்த நைட்ரஸ் ஆக்சைடு இருந்தாலும் அதனை சரியான முறையில் பிராக்டிஸ் செய்து வெற்றி பெறுங்கள்.  

இதனை விளையாட்டாக பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். இதனைப் படித்து விட்டு மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள்.