அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் !

0
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் 


வேலை நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

மற்ற மாநிலங் களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர் களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப் படுவதாகவும், 

கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப் படவில்லை எனவும் மருத் துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

புறநோயாளி களின் சிகிச்சையை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப் பட்டது. 

மருத்துவர்களின் இந்த போராட்ட த்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப் பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை யின் போது, நீதிபதிகளின் வேண்டு கோளை ஏற்று 

மருத்துவர்கள் தங்களது போராட்ட த்தை தற்காலிக மாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 

அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு, ஐகோர்ட் மதுரைக் கிளையில் இந்த தகவலை தெரிவித்தது.

மேலும், அரசு மருத்துவ ர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப் பட்ட,


ஒருநபர் குழு எப்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும், 

அதை நிறைவேற்ற எவ்வளவு காலமாகும் எனவும் அரசு மருத்துவர் களின் கோரிக்கை களை நிறை வேற்றுவது குறித்து 

சுகாதாரத் துறை முதன்மை செயலர் வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தர விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings