பிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியமா?

0
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர் கொண்டி ருக்கிறது.
வளர்ச்சி யடைந்த மேற்கு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும்

பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப் படுத்தவும், பிளாஸ்டிக் இல்லா உலகை

உருவாக்க வும் பல்வேறு முயற்சி களை முன்னெடுத்து வருகின்றன.

தமிழகத்தில் முற்றிலும் பிளாஸ்டி க்கைத் தடை செய்யும் அறிவிப்பைக் கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளி யிட்டது.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறு பாடின்றி அனைத்து விதமான


பிளாஸ்டிக் பொருட் களையும் தடை செய்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவை யில் அறிவித்தார்.

இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்க ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப் படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

2019 பிறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்த தாகவோ,

அல்லது அது குறித்த விழிப்புணர்வு விற்பனை யாளர்களு க்கு ஏற்பட்டுள்ள தாகவோ தெரிய வில்லை.

தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பயன் பாட்டை ஒழிப்பதற் கான சாத்திய ங்கள் என்னென்ன? 

நம் முன் நிற்கும் சவால்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரை யில் காணலாம்.

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்

முற்றிலு மாகப் பிளாஸ்டிக் பயன் பாட்டிற்குத் தடை விதிக்கப் பட்டாலும்,

ஒரு சில உபயோகங் களுக்கு தடையி லிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அவை,

வனத்துறை மற்றும் தோட்டக் கலைத் துறையில் நாற்றாங் காலுக் காகப் பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.

ஏற்றுமதிக் காக மட்டுமே சிறப்பாகத் தயாரிக் கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்

அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டல த்தில் அமைக்கப் பட்டுள்ள நிறுவனங்கள்

பால் மற்றும் பால் பொருட்க ளான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங் களுக்கான உறைகள்
இதையும் படிங்க..


இந்தியத் தர நிர்ணய நிறுவனத் தால் சான்றளிக் கப்பட்ட மக்கி உரமாகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள்

உற்பத்தித் தொழிற் சாலைகளில் பயன்படுத் தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்

தடை செய்யப் பட்டுள்ள பொருட்கள்

மேற்கண்டவை தவிர பிற பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பாரபட்ச மின்றித் தடை செய்யப் பட்டுள்ளன.

அவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களே.

தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்க ளான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டி க்குகள்,

பிளாஸ்டிக் பைகள்,

பிளாஸ்டிக் குவளைகள்,

பிளாஸ்டிக் தட்டுகள்,

தண்ணீர் பாக்கெட்டுகள்,

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா),

பிளாஸ்டிக் கைப்பைகள்

உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன் படுத்துதல் மற்றும் சேமித்து


வைத்தல் தடை செய்யப் படுவதாக தமிழக அரசின் அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையின் அவசியம்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளொன் றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப் படுவதாக வும்,

இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப் படாமல் சுற்றுச் சூழலுக்கு மாசு

ஏற்படுத்து வதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

அறிந்து தெளிக !!
2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகள் மனித இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக உயிரினங் களுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டி க்குகள் நிலத்தில் மாசு பாட்டை

ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீர் நிலைகளி லும் பல்வேறு பாதிப்பு களை ஏற்படுத்து கின்றன.

ஒருங்கிணைப் பாளர்கள் நியமனம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை செயல் படுத்துவ தற்காக ஐஏஎஸ் அதிகாரிக ளான அமுதா, டாக்டர் சந்தோஷ் பாபு

மற்றும் ராஜேந்திர ரத்னூ ஆகிய மூன்று பேரும் மண்டல ஒருங்கிணைப் பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணை யர்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் துடன்

இணைந்து 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடையை அமல் படுத்துவதற் கான

நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச் சூழல் மற்றும்

வனத்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ள அரசாணை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அரசு கூறும் மாற்று வழி

தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக

பயன்படுத் தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட் டுள்ளது. அதன்படி,

வாழையிலை,

பாக்குமட்டை,

காகித சுருள்,

தாமரை இலை,

கண்ணாடி மற்றும் உலோகத் தால் ஆன குவளைகள்,

மரப்பொருட்கள்,

காகித குழல்கள்,

துணி மற்றும் காகிதப் பைகள்

உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரியப் பொருட்க ளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

முன் நிற்கும் சவால்கள்

குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடையை அமல் படுத்துவதில்

அரசு பல்வேறு சவால் களைச் சந்திக்கும் என்றே எதிர் பார்க்கப் படுகிறது.

குறிப்பாக பிளாஸ்டிக் கிற்கு மாற்றாக கூறப்படும் பொருட்க ளுக்கான உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தி வருகிறதா?


பொது மக்கள் மற்றும் வியாபாரி களுக்கு முறையான விழிப்புணர்வு அளிக்கப் பட்டதா?

முழுமை யான செயல் வடிவத்தில் அரசு இறங்குமா? அல்லது ஹெல்மெட் அணிவது கட்டாய மாக்கப் பட்டது போல இதுவும் இருக்குமா?

பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப் படுவோருக் கான மாற்று வழிகள் என்ன?

போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இத்தனை சவால்களும் அரசின் முன் நிற்கின்றன.

இவற்றை யெல்லாம் விட பெரிய சவால், பிளாஸ்டி க்கிற்குப் பழக்கப்பட்ட மக்கள் தான்.

தற்போதைய சௌகரி யத்திற்காக நாம் பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்,

அடுத்த தலைமுறைக் கான வாழ்விற்கு பெரும் அச்சுறுத்த லாகத் திகழ்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும்.

அரசு தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எனவே, இப்போ திருந்தே சிறிது சிறிதாக பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கத் தொடங்குங்கள்.

இயற்கை யும் பூமியும் அனைவருக்கு மானது. நீடூழி வாழ்க.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings