அதிதீவிர 'பேய்ட்டி' புயல் - சென்னை அருகே கரையைக் கடக்கும் !

0
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில் தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. 
கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும் பாலான இடங்களில் மழை பெய்ய வில்லை. 

கடந்த , 24 மணி நேரத்தில், சாத்தனுார் மற்றும் சத்திய மங்கலத்தில், தலா, 2 செ.மீ., - வேலுார் கலவை மற்றும் கிருஷ்ண கிரியில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.


< தற்போதைய வானிலையை பொருத்த வரை தமிழகத்தில் , 28 மாவட்டங் களில் வறண்ட வானிலை நிலவுகிறது.


கரூர், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங் களில், ஒருசில இடங்களில், 

லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை யில் திடீர் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையத் தெரிவித துள்ளது.

இதனிடையே வங்கக் கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட் டுள்ளதாக . வானிலை ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். 

கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கில், இந்திய பெருங் கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும், 

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதிக்கும் இடையே, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு, அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும், 


< ஈரப்பதம் நிறைந்த மேக கூட்டங்கள் வலு ஏற்படுத்து வதால், புயல் சின்னமாக உருவாகும் என்றும்,

வரும், 10ம் தேதி முதல், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டல மாகவும், பின், 

புயலாகவும் மாறி, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என, எதிர் பார்க்கப் படுகிறது.

சென்னை க்கும், ஆந்திராவின், விசாகப் பட்டினத்து க்கும் இடைப்பட்ட பகுதியில், 

இந்த புயல் கரையை கடக்கும் என்றும் இந்த புயல், வலுமிக்க தீவிர புயலாக உருவெடு க்கும் என, கணிக்கப் பட்டுள்ளது.

இந்த புயலுக்கு, தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'பேய்ட்டி' என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப் படுகிறது. 


< புதிய புயல் உருவாவ தால், தற்போதைய நிலையில், கடலோர பகுதிகளில்

வறண்ட வானிலையே நீடிக்கும எனவும் என, வானிலை ஆய் வாளர்கள் கணித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings