இந்தியாவின் பிட் காயின் ATM திறப்பு !

0
பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியாவின் முதல் பிட்காயின் ATM திறக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பிட் காயின் (Bit Coin) உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளு க்கு (Crypto Currency) 
தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், பெங்களுரு வில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கிரிப்ட்டோ கரன்சி ATM துவங்கப் பட்டுள்ளது.

விர்ச்சுவல் கரன்சி எனப்படும் பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையின் மூலம் பணம் யாரால் யாருக்குக் கொடுக்கப் படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். 


மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால் 10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப் பதாகவும் கூறப்படு கிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது முதன் முதலாக கிரிப்டோ கரன்சி களுக்காகத் தனியாக ATM துவங்கப் பட்டுள்ளது. இந்த ATM-ல் டெபிட்/கிரெடிட் கார்டு ஸ்லாட் செயல்படாது. 

யூனோகாயின், யூனோடாக்ஸ் (Unodax) வாடிக்கையாளர்கள், 500 ரூபாய் நோட்டுகளாக ரொக்கமாக நாள் ஒன்றுக்கு ஒரு பரிவர்த்தனை க்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் போடலாம் அல்லது எடுக்கலாம். கணக்கில் உள்ள தொகை மூலம் கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம்.

இந்த ATM மையம் யூனோகாயின் (Uno Coin) என்ற நிறுவனம் மூலம் நிறுவப் பட்டுள்ளது. தங்களிடம் 13 லட்சம் வாடிக்கை யாளர்கள் இருப்பதா கவும், அவர்களது வசதிக்காக ATM திறக்கப் பட்டுள்ளதாக யூனோகாயின் நிறுவனர் சாத்விக் விஸ்வநாத் தெரிவித் துள்ளார்.


இது போன்ற ATM மையங்கள் டெல்லி, மும்பையி லும் திறக்கப்படும் என்றும், இது வழக்கமான ATM எந்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக செல்லு படியாகக் கூடியவை அல்ல என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந் தாலும், அவை சட்டவி ரோதமானவை என்றும் கூறவில்லை என சாத்விக் விஸ்வநாத் குறிப்பிட் டுள்ளார்.

முதலீடு செய்பவரே அதனால் ஏற்படும் இடர்ப் பாடுகளுக்கு பொறுப்பு என்பதோடு, பிட்காயின் தொழில் ஒழுங்கு படுத்தப் பட்டது அல்ல என்பதே அதன் பொருள் என்றும் சாத்விக் விஸ்வநாத் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)