ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?

இது இன்னொரு வகையான கொழுப்பு. இது அதிகமானால் நல்ல கொழுப்பின் அளவு குறைந்து விடும்.
ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?
இந்த வகையில் இது நமக்கு கெடுதல் செய்கிறது. இந்த வகை கொழுப்பை நாம் உணவு மூலமாகவும் பெறுகிறோம் 

நம் உடலும் உற்பத்தி செய்கிறது.  சர்க்கரை நோய் இருப்பவர் களுக்கு இது அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.
நம் உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்?

1.மரபு வழி காரணமாக சிலருக்கு அதிக கொழுப்பு இருக்கும்.

2. குண்டாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
3. சோம்பேறியாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்

4. வயது ஆக ஆக கொழுப்பு அதிகரிக்கும்.

5. உணவு பழக்கங்கள் – கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதி னால் கொழுப்பு அதிகரிக்கும்.

6. பால் – மாதவிலக்கு சுழற்சி முடிந்த பெண்களுக்கு அவர்கள் வயதை யொத்த ஆண்களை விட கொழுப்பு அதிகமாகவும், 

மாதவிலக்கு சுழற்சி முடியா விட்டால் அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு குறைவாகவும் இருக்கும். 

அதாவது வயதான பெண்கள் & எல்லா ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

7. Type 2 சர்க்கரை நோய் (diabetes) HDL அளவை குறைக்கும்.
கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க சில வழிகள்.

1. சரியான உணவு பழக்கங்கள்.

2. உடற்பயிற்சி.

3. மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்.

அறிகுறிகள்:-

கொழுப்பு அதிகமா இல்லையா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை ஒன்றே வழி. 
ட்ரைகிளிசரைட் () குறைய எந்த வகையான உடற்பயிற்சி செய்யலாம்?
அதனால் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொழுப்பின் அளவை அறிந்து கொள்ளுங்கள். 

கீழுள்ள இந்த அட்டவணை எந்த கொழுப்பு எவ்வளவு இருந்தா நல்லது கெட்டது என்ற குறிப்பை தருகிறது.
Tags:
Privacy and cookie settings