நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வழியாக சில குறிப்பிட்ட பாதிப்புகள் உடலில் உண்டாகின்றன. 


சில வகை பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிய வரும். ஆனால் எது எப்படி இருந்தாலும், 

இத்தகைய பாதிப்புகளை முடிந்த வரை விரைவாக போக்குவது நல்லது. 

அந்த வகையில் நாம் இன்று சிவப்பு வெங்காயத்தை பயன்படுத்தி குடல் புழுக்களைப் போக்குவது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். 


வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கூறுகளுடன் இதர மூலப்பொருட் களைச் சேர்ப்பதால், 

குடல் புழுக்களைப் போக்கி, வேகமான நிவாரணத்தை அளிக்க உதவுகிறது.

குடல் புழு என்பது ஒரு குறிப்பிட்ட வயிறு பாதிப்பைக் குறிப்பதாகும். 

இது ஒரு ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது, இது பொதுவாக எண்ட்ரோபியஸ் வெர்மிகுலர்ஸ் என்று அழைக்கப் படுகிறது. 

இதனை ஊசிப் புழு என்றும் கூறலாம். இதன் மூலம் ஏற்படும் தொற்றை ஊசிப்புழு தொற்று என்று கூறுவார்கள்.