இரண்டு ஆயிரம் சிம் கார்டுகளை வாங்கும் சென்னை மாநகராட்சி !

0
சென்னை மாநகராட்சி சார்பில் பணியாளர்களுக் காக சியுஜி வசதியுடன் கூடிய 2 ஆயிரம் 


பிஎஸ்என்எல் சிம் கார்டு களை ரூ.35 லட்சம் செல வில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி யின் பரப்பு 426 சதுர கி.மீட்டராக விரிவடைந் துள்ளது. வார்டுகளின் எண் ணிக்கை 200 ஆக உள்ளது. 

ஏற்கெனவே தலைமை யிடத்து அதிகாரிகள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், பொறி யாளர்கள், 

மருத்துவ அலு வலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர், வார்டு பொறி யாளர் உள்ளிட்டோரு க்கு சியுஜி சிம் கார்டுகள் வழங்கப் பட்டுள்ளன.

அதே நேரத்தில் துப்புரவு மேஸ்திரிகள், வரி வசூலிப்பவர்கள் உள் ளிட்டோருக்கு மாநகராட்சி சார்பில் சிம் கார்டுகள் வழங்கப்பட வில்லை. 

மேலும் விரிவாக்கப் பட்ட பகுதிகளில் உள்ள அதி காரிகளுக்கு, வார்டு களுக்கு ஏற்றவாறு வரிசை எண் சரியாக அமைய வில்லை. 

அதனால் பல் வேறு நிலை அலுவலர் களுக்கு சியுஜி வசதி யுடன் கூடிய சிம் கார்டு களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “மாநகராட்சி யின் 

அனைத்து பணியாளர் களையும் இலவசமாக எளிதில் தொடர்புகொள் ளும் விதமாக ரூ.35 லட்சம் செலவில் சியுஜி வசதி யுடன் 

கூடிய 2 ஆயிரம் பிஎஸ்என்எல் சிம் கார்டு களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings