திமிங்கிலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளா? அதிர்ச்சியில் உலக நாடுகள் !

0
இந்தோனேசியா கடற்கரை ஒன்றில் கரைஒதுங்கிய திமிங்கில த்தின் சடலத்தில் 13 பவுண்ட் (ஏறக்குறைய 6 கிலோ) பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.
அணு ஆயுதங்களை விட உலக நாடுகளை அச்சுறுத்தலு க்கு ஆளாக்கி இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் தாம். 

மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது. 


நாம் அன்றாடம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்வளம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கிறது. 

முக்கியமாக உயிரினங்கள் உட்கொள்ளும் உணவில் ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் கலக்கும் போது, பல்வேறு நோய்களுக் கான அடித்தளத்தைப் போடுகிறது.

பறவையின் வயிற்றில் பிளாஸ்டிக், மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து செல்ல நேர்கிறது. 

சர்வதேச அளவில் இயங்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீர்நிலை களிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர். 
இந்நிலையில் இந்தோனேசியா கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் 

சடலத்தில் 13 பவுண்ட் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப் பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


இந்தோனேசியா வின் சுலாவெசித் தீவின் அருகே வக்காடோபி தேசியப் பூங்கா உள்ளது. 

கடந்த திங்கள் கிழமை (19-11-2018) 31 அடி நீளமுள்ள திமிங்கிலம் அங்குள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியது. 

அதன் வயிற்றில் 115 பிளாஸ்டிக் குவளைகள், 25 பிளாஸ்டிக் பைகள், நான்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் 

உட்பட 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் (ஒரு பெரிய மூட்டை அளவு) கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் அதன் வயிற்றில் இருந்துள்ளன. 

இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் எந்த அளவுக்குக் கடல் வாழ் உயிரினங் களைப் பாதிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலான விழுக்காடு ஐந்து நாடுகளால் 
உருவாக்கப் படுவதாகச் சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது. 


சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகள் தாம் 

பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. 

ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறதாம். 

இதே நிலை நீடித்தால் கடல் வாழ் உயிரினங்கள் படிப்படியாக அழிவைச் சந்திக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறது கடல் பாதுகாப்பு அமைப்புகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)