இலவசங்கள் கையேந்த அல்ல, கைகொடுக்க - நீதிமன்றம் புரிந்து கொள்ளுமா?

0
தமிழகத்தை ஆளும் அரசுகள் தேர்தல் லாபத்திற்காக இலவசங் களை வாரி வழங்கி, 


மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி விட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி இனிவரும் காலங்களில் வறுமை கோட்டிற்கு 

கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. 

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தாகக் கைது செய்யப்பட்டு, அத்தியா வசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் 

கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமர்நாத் என்பவரை சிறை யிலடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 31 உத்தரவு பிறப்பித்தார். 

இதனை ரத்து செய்யக்கோரி அமர்நாத் மனைவி சவ்ஜன்யா தாக்கல் செய்த ஆட்கொணர்வு 

மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு ஏழைகளுக்கு வழங்கப்படும் 

ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றச்செயல் என கருத்து தெரிவித்தது.

மேலும், எத்தனை குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப் படுகிறது? 

ஒரு ஆண்டுக்கு கொடுக்கப் படும் இலவச அரிசியின் மதிப்பு எவ்வளவு? பொது 

மக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள்/ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது? 

ரேசன் அரிசி முறையாக விநியோகிக்க படுகிறதா அல்லது கையாடல் செய்யப் படுகிறதா என்பதை கண்காணிக்க 
ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

தேர்தல் லாபத்திற்காக இலவசங் களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு 

தமிழகத்தை ஆளும் அரசுகள் தள்ளி விட்டுள்ள தாக குற்றம் சாட்டினர். 


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி இனி வரும் காலங்களில் 

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர். 

மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், 

அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப் பட்டால் ஆகும் செலவு குறித்தும்

நவம்பர் 30 -ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

நீதி மன்றத்தின் இந்த கருத்தை நடைமுறைப் படுத்த முடியுமா? அப்படி செய்தால் விளைவு என்ன ? 

உண்மை நிலவரம் என்ன ? என்பது போன்ற பல கேள்விகள் குறித்து புதிய தலைமுறை இணைய தளம் சார்பில் கருத்துக்கள் பெறப்பட் டுள்ளது. 

நீதி மன்றத்தின் கருத்து தொடர்பாக திமுக மாநிலங் களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேசிய போது, 

“அரசாங்கம் என ஒன்று உருவானது முதலே இலவசங்கள் இருந்து வருகின்றன. 

இலவசங்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மானியங்கள் என்பது ஏழைகளுக்கு மிக முக்கியம். 

அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் இலவசங்கள் அல்லாமல் மானியங்கள் என பார்க்க வேண்டும். 

ஒரு கால கட்டத்தில் 90% ஏழைகள் மற்றும் 10% மட்டுமே வசதி படைத்த வர்கள் நாட்டில் இருந்தனர். 
அப்போது ஏழைகளுக்கு வழங்கப் பட்ட இலவசங்கள் அவர்களுக்கு வாழ்வளித்தது. 

காமராஜர் கூட இலவசக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் தான் நிறைய மாணவர்கள் கல்வி கற்றனர்.


அதே போன்று மருத்துவம் இலவசமாக கொண்டு வரப்பட்டது. அதுவே ஏழை மக்களை இதுவரை காத்து வருகிறது. 

அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளில் இலவச படிப்பு மற்றும் மருத்துவம் கிடைக்கிறது. 

வசதிப் படைத்தவர்கள் அதை வேண்டாம் என தனியாரு க்கு செல்கின்றனர். 

ஒரு ரூபாய் அரிசி என்ற திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான். அதுவே இலவச அரிசிக்கு முன்னோடி யாக அமைந்தது. 

கிராமப்புற ஏழைகள் வசதியின்றி அடுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று டிவி பார்த்ததால் இலவச டிவி கொடுத்தோம். 

மாணவர் களுக்கு கொடுக்கப்படும் இலவசங்கள் அவர்களை ஊக்கப் படுத்துவதற்கு தான். கையேந்த வைப்பதற்கு அல்ல. 

வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர் களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்பது தவறானது.  

ஏனென்றால் யார் வறுமைக் கோட்டு கீழ் இருப்பவர்கள் என்பதை பிரிக்க முடியாது. 

அப்படி பிரிக்க முயன்றால், அதில் பாகுபாடு ஏற்பட்டு முறையாக பிரிக்க முடியாத நிலை உண்டாகும். 

இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப் படுவார்கள். அப்படி பிரிக்க வேண்டு மென்றால், யார் வறுமைக் கோட்டிற்கு 
கீழே இருப்பவர்கள் என்பதை நீதி மன்றமே கூறவேண்டும்” என தெரிவித்தார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறும் போது, “இலவச அரிசி வழங்கப் படுவதே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு தான். 

தமிழகத்தில் ரேசன் அட்டைகள் 3 வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அரிசி வாங்கும் குடும்பம், சர்க்கரை வாங்கும் குடும்பம் 


மற்றும் ரேஷன் அட்டையை அடையாளமாக பயன்படுத்தும் குடும்பம் என வகுக்கப் பட்டுள்ளது. 

இதில் அரிசி வாங்கும் குடும்பத்தினர் வருமானம் மற்றும் வசதியின் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள். 

அது தொடர்பாக ஆய்வு செய்த பின்னரே அவர்கள் அரிசி பெரும் குடும்ப அட்டையை பெற முடியும். 

இதனால் வசதி படைத்தவ ர்களுக்கு இலவச அரிசி வழங்கப் படுவதில்லை. 

இலவசங்கள் மக்களை கையேந்த வைப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும் கருத்து நீதிமன்றம் மற்றும் நீதிபதி களுடையது. 

இலவசக் கல்வி கொடுத்து மாணவர்களை ஊக்கு விக்கிறோம். அது கையேந்த வைப்பதல்ல. 

இருப்பினும் இலவசங்கள் குறித்து கருத்தினை தெரிவித் திருப்பது நீதிமன்றம் என்பதால் 

அதனை விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்து” என்று கூறினார்.

வழக்கறிஞர் தமிழ்மணி கூறும் போது, “சமூகப் பிரச்னைகளை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதே முதலில் தவறு. 

சமூக ஆர்வலர்கள் சிலர் இது போன்ற சமூக பிரச்னைகளை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அது தவறான முறையில் சிக்கிக் கொள்கிறது. யாருக்கு இலவசம் கொடுக்க வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 


எடுத்துக் காட்டாக 

கஜா புயலால் உயிரிழந்த கால் நடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை நிவாரண மாக கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

இந்த விவகாரம் நீதி மன்றத்திற்கு சென்றால், எல்லா மாடுகளுக்கும் எப்படி ஒரே விலை கொடுப்பீர்கள், 
யார் இந்த தொகை முடிவு செய்தது ? போன்ற பல கேள்விகள் எழும்பும். 

இதனால் மானியங்கள் சென்று செல்வதில் சிக்கல் ஏற்படும். தாமதம் ஆகும். எனவே யாருக்கு எதை வழங்க வேண்டும் என்பது அரசுக்குத் தான் தெரியும். 

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர் களுக்குத் தான் ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்து தவறானது. 


தமிழகத்தில் பல பொருட்களில் விலை இடத்திற்கு ஏற்றாற் போல் மாறுபடும். 

இதனால் சமமாக வறுமைக்கோட்டு கீழ் உள்ளவர்கள் யார் என்பதை பிரிக்க முடியாது. 

எனவே யாருக்கு எதை வழங்க வேண்டும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசே முடிவு செய்யட்டும்” என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings