தொட்டி முழுவதும் நாணயம் கொடுத்து ஐபோன் வாங்கிய இளைஞர் !

0
ஆப்பிள் ஐபோன் வாங்குவதற் காக வீடு, கார் மற்றும் சிறுநீரகம் விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் 
தற்போது மாஸ்கோவில் குளியல் தொட்டி முழுவதும் தான் சேகரித்த நாணயங்களை 

கொண்டு வந்து கொடுத்து ஒருவர் ஐபோன் வாங்கியுள்ள ருசிகர சம்பவம் நடந்துள்ளது.


மாஸ்கோவை சேர்ந்த கொவலென்கோஸ்யத் என்ற அந்த இளைஞர், ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் வாங்குவதற் காக, 

தான் சேகரித்து வைத்த நாணயங் களை நண்பர்கள் உதவியுடன் குளியல் தொட்டியில் நிரப்பியுள்ளார். 

அங்கிருந்து மாஸ்கோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு சென்ற அவர், குளியல் தொட்டியுடன் உள்ளே நுழைய முயன்றார். 

ஊழியர்கள் அவரை தடுக்க ஐபோன் வாங்க வந்திருப்ப தாகக் கூறியதை அடுத்து உள்ளே அனுமதிக்கப் பட்டார். 


பின்னர் குளியல் தொட்டியில் நிரப்பியுள்ள நாணயங்களை கொண்டு ஐபோன் எக்ஸ்எஸ் வாங்கி யுள்ளார். 

தற்போது இளைஞர் நாணயங் களை கொடுத்து ஐபோன் வாங்கி சென்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings