ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு - விசாரணைக் குழு !

0
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 

இது தொடர்பான வழக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை க்கு வந்தது.

விசாரணை யின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வறிக்கை யில் அருண் அகர்வால் குழு தெரிவித்திருப்ப தாகவும், 

ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும் படியாக இல்லை என்றும், 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படாமல் ஆலை மூடப்பட் டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை கண்காணிக்க வேண்டும். 

தற்போது ஆலைப்பகுதியில் உள்ள காப்பர் கழிவுகளை அகற்ற வேண்டும், துறை முகத்தில் இருந்து காப்பர் துகள்களை கண்டெய்னர்களில் கொண்டு வர வேண்டும், 


10 நாட்களுக்கு ஒரு முறை காப்பர் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும் ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விசாரணை யின் போது வழக்கை அடிக்கடி ஒத்தி வைக்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் முன் வைக்கப் பட்டது.

மேலும், ஆய்வறிக்கைக் குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு 

உத்தர விட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

முன்னதாக,

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் 

வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே. கோயல் தலைமை யிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

பசுமைத் தீர்பபாயம் பிறப்பித்த உத்தரவில், 'ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடு குறித்தும், 


சூழல் மாசுபாடு விதிகளை ஆலை கடுமையாக மீறியிருப்பது குறித்தும் போதுமான ஆதாரங்களை 

தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியமும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற மனுதாரர்களும் அளிக்க வில்லை. 

இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னைக்குத் தீர்வுகாண நம்பகமான வழி முறைகளை காணும் வகையி லும், 

அனைத்துத் தரப்பினரின் நியாயங்களை ஆராயும் வகையிலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் சுதந்திரமான குழுவிடம் வழக்கை ஒப்படைக் கிறோம். 

இக்குழு இந்த விவகாரத்தை தொடக்கத்தி லிருந்து விசாரிக்கும்' என தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலை யில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

இந்நிலை யில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில்

அதன் தலைவர் ஏ.கே. கோயல் தலைமை யிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, 


ஆய்வறிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது.

பொது மக்களின் ஒத்துழைப்பு காவல் துறையினரின் அரிய பணி அத்தும் இணைந்தே விருது கிடத்திருக் கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)