சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை மொசாட் !

0
உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும் முன்னோடி என்றே கூறப் படுகிறது இந்த இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பை. 
சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை மொசாட் !
உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கர மானதாக அனைவராலும் கருதப்படும் உளவு அமைப்பு மொசாட். 

அமெரிக்கா வின் சி.ஐ.ஏ. சிறந்த உளவு அமைப்பு என்று கருதபவராக நீங்களிருந்தால் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் ‘பின் விளைவுகள்’ !
அமெரிக்கா வின் சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை தான் மொசாட். ஆனால் அமெரிக்காவிடம் தான் பயிற்சி பெற்றது மொசாட் 

ஆனால் இப்போது அமெரிக்கா சி.ஐ.ஏ.வே ஆச்சரியப்படும் அளவிற்கு மொசாட் உள்ளது. 

இஸ்ரேலுக்கு வரும் காலத்தில் எதிரி ஆவான் என்று மொசாட் யாரையாவது எண்ணினால் ஆரம்பத்திலேயே அந்த அமைப்பை அழித்து விடும். 

1972ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சி யாளர்கள் 11 பேர் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொரு வரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் அமைதியானது. 

மொசாட் செய்த அந்த படுகொலைகள் பாலஸ்தீனர்கள் இடையில் பெரும் பயத்தை உண்டாக்கிய ஒரு செயல். 

இஸ்ரேல் நாடு பாலஸ்தீனர்கள் வாழும் ஊரைச் சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப் பட்டுள்ளது.  

இது தற்கொலை படை தாக்குதல்களை தடுக்க என்று சொல்வதை விட இந்த தடுப்பு சுவரின் மூலம் 40 லட்சம் பாலஸ்தீனர் களை சிறைவாசி களாக ஆக்கும் என்பதே மறுக்க முடியாத நிதர்சனம்.

CIA and Mossad(Pic:wearechange)

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டில் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் மேற்கொண்ட ரகசிய படுகொலை வேட்டையின் பெயர் Operation Wrath of God. 

இஸ்ரேல் மிகச் சிறிய நாடாகவே இருந்த போதிலும் அந்த சிறிய நாட்டை பார்த்து பொருளாதாரத்தி லும் மக்கட்தொகையிலும் மிகையாக இருக்கும் 
மேற்குலக நாடுகள் கூட பயப்படுகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் மொசாட். இஸ்ரேல் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் கூட 
எந்த நேரமும் தன்னை அழிக்க காத்துக் கொண்டிருக்கும் அரபு தேசங்கள் மத்தியில் மிகச் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)