சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் மற்றும் எரி சாராயம் !

0
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி (2.7 கோடி டன்) நாட்டின் தேவையை விட (2.3 கோடி டன்) அதிகமாகவுள்ளது என்றும் இதனால் சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைகிறது.
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் மற்றும் எரி சாராயம் !
பயிரிடப்படும் கரும்பின் ஒரு பகுதி சர்க்கரை உற்பத்திக்குப் பதிலாக வேறு பயன் பாட்டிற்கு செல்லும் போது சர்க்கரை விலை வீழ்ச்சியடையாமல் நிலையாக இருக்கும்.

சரி, கரும்பை வைத்து வேறு என்ன உற்பத்தி செய்யலாம். பிரேசில் இதற்கு பலமான பதில் வைத்துள்ளது. “எத்தனால் உற்பத்தி”. 

அதாவது, சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்து எடுக்கும் போது  வரும் கரும்புச் சாற்றிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, சர்க்கரைக்குப் பதிலாக நேரடியாக “எத்தனால்” தயாரிக்கலாம். 
எடுத்துக் காட்டாக, 1000 கரும்பு விளைச்சல் இருக்கிறது என்றால். அதில் 200 கிலோவை எத்தனால் உற்பத்திக்கும், 

800 கிலோவை சர்க்கரை உற்பத்திக்கும் பயன் படுத்தினால், சந்தைக்கு விற்பனைக்கு வரும் சர்க்கரையின் அளவும் குறையும், இதனால் சர்க்கரையின் விலையும் ஒரேயடியாக குறைந்து விடாமல் நிலையாக இருக்கும்.

சரி.. எத்தனாலுக்கு வருவோம்.

எத்தனால் என்பது சுற்றுசூழலை மாசுபடுத்தாத ஒரு எரிபொருள். வாகனங்களில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தலாம். 

1 டன் (1000 கிலோ) கரும்பி லிருந்து ஏறக்குறைய 70 லிட்டர் எத்தனால் வரை உற்பத்தி செய்யலாம். 1 லிட்டர் எத்தனால் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 
அதாவது ஒரு டன் கரும்பி லிருந்து எத்தனால் உற்பத்தி மூலம் ரூ.2450 முதல் ரூ.2800வரை கிடைக்க வாய்ப்புள்ளது. 

மேற்சொன்ன விவரங்கள், கரும்புச் சாற்றி லிருந்து நேரடியாக எத்தனால் உற்பத்தி செய்வது தொடர்பானது. 
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் மற்றும் எரி சாராயம் !
மற்றொரு வகையிலும் எத்தனால் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை உற்பத்தி செய்தபின் கிடைக்கும் 

கழிவிலிருந்து (மொலாசஸ்) தயாரிக்கும் வழி தான் அது. இந்த வகையில் டன்னிற்கு ஏறக்குறைய 10லிட்டர் எத்தனால் கிடைக்கும்.
எத்தனாலுக்குத் தடை ?:

கரும்பி லிருந்து நேரடியாக எத்தனால் உற்பத்தி செய்தால் அதிகப் படியாக உள்ள சர்க்கரை உற்பத்தி குறையும் 

அல்லது சர்க்கரை தயாரித்த பின் கிடைக்கும் கழிவி லிருந்து எத்தனால் தயாரித்தால் சர்க்கரை ஆலை களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். 

சுற்றுச்சூழல் சீர்கேடு குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். 

இவ்வளவு பயன்கள் இருந்தும் தமிழகத்தில் எத்தனால் உற்பத்திக்கு அனுமதி யில்லை..? ஆச்சரியமாக இருக்கிறதா..?
”அரசியல்ல… இதெல்லாம் சகஜமப்பா ” என்ற ஒற்றை வரித்தத்து வத்தின் அடிப்படையில் நாட்டின் மிகப் பெரியதொரு பிரச்னைக்கு தீர்வு காணும் எளியதொரு வழிமுறை கண்டும் - காணாமல் விடப்பட் டுள்ளது.

எத்தனால் உற்பத்திக்கு ஏன் தமிழக அரசு அனுமதி வழங்க வில்லை என்று விசாரித்த போது.. நமக்குக் கிடைத்த தகவல் அதிர்ச்சி யளிக்கிறது. 
சர்க்கரை ஆலைக் கழிவிலிருந்து (மொலாசஸ்) எரி பொருளான எத்தனால் தயாரிப்பதற்குப் பதில் “எரி சாராயம்” (Rectified Spirit) தயாரிப்பதற்கே தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உற்பத்தி செய்யும் வழிமுறையில் எத்தனால், எரிசாராயம் இரண்டிற்கும் பெரிய வித்தியாச மில்லை. 

அப்படியிருந்தும், தமிழக அரசு எரிசாராய உற்பத்திக்கு மட்டும் அனுமதியளிப்பது ஏன்..? காரண மிருக்கிறது. 
வருடத்திற்கு ரூ.30000 கோடியை அள்ளித்தரும் டாஸ்மாக் மதுக்கடைக ளுக்கு சரக்கு சப்ளை செய்யும் மதுபான ஆலைகள் விஸ்கி, பிராந்தி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளே இந்த “எரிசாராயம்” தான். 

எத்தனால் உற்பத்திக்கு அனுமதியளித்து விட்டால், ”எரிசாராய” உற்பத்தி குறைந்து விடுமோ என்ற அக்கறையில் தான்(!!??) தமிழக அரசு, எத்தனால் உற்பத்திக்கு அனுமதியளிக்க வில்லை.

அனுமதியளித்து விட்டால் உடனே தமிழகத்தி லுள்ள எல்லா சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் தயாரித்து வி டமுடியுமா என்றால், அதுவும் இல்லை. 

பெரும்பாலான தனியார் ஆலைகள் எரிசாராய உற்பத்திக்கு “வடிப்பாலைகள்” (Distillery) வைத்துள்ள நிலையில் 
தமிழக அரசின் 18 சர்க்கரை ஆலைகளில், 2 ஆலைகளில் தான் ”வடிப்பாலை” உள்ளது. சில ஆலைகளில், வடிப்பாலை தொடங்கப்பட அடிப்படை வேலைகள் நடந்து வருகிறது. 
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் மற்றும் எரி சாராயம் !
இந்த வடிப்பாலைகள் இருந்தால், ஆலையி லிருந்து வரும் கரும்புச் சாற்றுக் கழிவி லிருந்து (மொலாசஸ்) 1 டன் கரும்பிற்கு குறைந்தது 9 லிட்டர் எத்தனால் எடுக்க முடியும்.

மொத்தத்தில், தொழில்துறை வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாடு, பொதுமக்கள் நலனிற்கு 

தமிழக அரசு எந்த லட்சணத்தில் வேலை செய்து கொண்டிருகிறது என்பதற்கு இதுஒரு சிறந்த உதாரணம்.

90% சர்க்கரை ஆலைகளில் கூடுதல் வருவாய் பெற்றுத்தரும் வடிப்பாலை இல்லை. இருக்கும் வடிப்பாலைகளில் எத்தனால் உற்பத்திக்குத் தடை. வடிப்பாலை இல்லாத 
சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி யாகும் கழிவு (மொலாசஸ்) மிகக்குறைந்த விலையில் தனியாருக்குத் தாரை வார்க்கப் படுகிறது.

இதே ஆலைகளில் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டால், நியாயமான விலைக்கு மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க முடியும்.
குறிப்பு: 

சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற் காகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் ஏற்படும் அன்னிய செலவாணியைக் குறைப்பதற் காகவும் மத்திய அரசாங்கம் 2012ல் எண்ணெய் நிறுவனங் களுக்கு ஒரு உத்தர விட்டது. 

அவ்வுத்தரவின் மூலம், பெட்ரோலுடன் 5% எத்தனால் கலந்துதான் விற்க வேண்டும் என்று கட்டாயா மாக்கப்பட்டது. 

இதன் மூலம் ஆண்டுக்கு 100கோடி லிட்டர் எரிபொருள் இறக்குமதி குறையும் என்று அறிவிக்கப் பட்டது. 
(இது எந்த அளவில் இப்போது நடை முறையில் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய வேறு விஷயம்…) 

இது மட்டுமல்லாமல், சர்க்கரை ஆலைகளில் மின்சார உற்பத்தியில் காட்டும் மெத்தனம் (Co-Generation), 

சர்க்கரை & எரி சாராயத்திற்கு வரிவிதிக்கும் முறை, வெளி நாட்டிலிருந்து சர்க்கரை இறக்குமதி போன்ற பல்வேறு குளறு படிகளால் 

விவசாயி களுக்கும் கரும்பிற்கு நல்ல விலை கிடைப்ப தில்லை; கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் பலகோடிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன; 
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் மற்றும் எரி சாராயம் !
தொடர்ந்து கிடைத்து வந்த இலாபம் குறைந்து விட்டது என்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகமும் கூக்குரலிடு கின்றனர். 

இவர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தெளிவான தீர்வுகள் இருக்கின்றன. 
ஆனால், இதில் கவனம் செலுத்த, அக்கறை காட்டத்தான் தமிழக அரசுக்கு ஆர்வமில்லை. 

துறை வல்லுனர்கள், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை யோடு சரியான கொள்கை முடிவுகள் எடுத்து,

அரசியல் தலையீடின்றி செயல் படுத்தினால்  விவசாயிகள் - தொழில் துறையினர் - பொது மக்கள் அனைவருமே பயன் பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)