ரயில் விபத்திற்கு, ரயில் ஓட்டுநர் தான் காரணமா? அமைச்சர் விளக்கம் !

0
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் அமைந்துள்ள ஜோரா பதக் பகுதியில் தசரா விழா கொண்டாட்ட த்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
நேற்று மாலை தண்ட வாளத்தை யொட்டி உள்ள மைதானத்தில் ராவண வதம் செய்யும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

இந்த விழாவில் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியை காண பொது மக்கள் அதிக அளவில் கூடினர். நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல் நெருக்கடியாக மக்கள் கூட்டம் அலை மோதியது. 

இதனால், மைதானத்தின் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது மக்கள் நின்று கொண்டு ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜலந்தர் நகரிலிருந்து அமிருதசரஸ் நோக்கி அவ்வழியே தொடர் வண்டி வந்து கொண்டிருந்தது. 

ஆனால் அங்குள்ள மக்கள் ஆரவாரமாக மக்கள் சத்தம் போட்டு கொண்டாடிய தாலும், பட்டாசுகள் வெடித்தாலும் ரயில் வந்த சத்தம் அவர்களுக்கு கேட்க வில்லை. 

அதனால் அந்த நேரத்தில் அங்கு வந்த தொடர்வண்டி அவர்கள் மீது மோதியது. 

மேலும், ஒரே நேரத்தில் எதிர் புறத்திலும் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தால் பலரால் தப்பிக்க முடியாமல் போய் விட்டது.

இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 61 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப் பட்டன. 

இவர்களில் 33 பேரின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப் பட்டுள்ளது. சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். 

இந்த விபத்தில் காய மடைந்தவர்கள் அருகில் உள்ள ஏழு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும், மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்துக்கு, ரயில் ஓட்டுநரின் அலட்சியம் தான் காரணம் என்றும், ரயில் அதிக வேகத்தில் வந்தது தான் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் பலரால் தெரிவிக்கப் பட்டது.

இதை யடுத்து, ரயில் விபத்து தொடர்பான விசாரணையை, அந்த ரயிலை இயக்கிய ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

அப்போது அந்த ரயிலின் ஓட்டுநர் கூறியதாவது,

தொடர் வண்டியை இயக்க எனக்கு பச்சை சமிக்ஞை கிடைத்ததால், வழக்கம் போலவே தொடர் வண்டியை இயக்கினேன். 

ஆனால், தண்ட வாளத்தில் அத்தனை பேர் நின்றிருப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்க வில்லை என அந்த ஓட்டுநர் தெரிவித்தார்.

இந்நிலை யில், இது தொடர்பாக இணையமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தி யாளர்களிடம் பேசுகையில்,


இந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ரயில்வே துறை காரணமில்லை. 

ரயில்வேயின் தவறு எதுவுமில்லை. இது போன்ற திருவிழா நடத்துவது குறித்து எந்த விதமான தகவலும் எங்களுக்கு தெரிவிக்க வில்லை. 

ஆதலால், ரயில்வே துறையின் பக்கம் எந்த விதமான தவறும் இல்லை என்றார். 
மேலும், தொடர் வண்டியின் ஓட்டுநர் விதி முறைப்படியே ரயிலை இயக்கியதால், 

அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)