கடைகளில் 2 ஆயிரம் லாபம் பாக்குற எங்களுக்கு 5000 அபராதம் !

0
தற்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 
இதனை மீறி கடைகளில் அவர்கள் பயன்படுத்தப் பட்டால் 5000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவித்தது.

இந்த உத்தரவினை அடுத்து சில கடைகளில் அத்து மீறி பாலிதீன் கவர்கள் படுத்தியதால் அபராதமும் அரசினால் வசூலிக்கப் பட்டுள்ளது. 

இந்த நிலையில் பல இடங்களில் கடைகளில் பாலிதீன் கவர்கள் பயன் படுத்துவதை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பெரும் பாலான கடைகளில் தற்போது துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்து கின்றனர். 

இதனை யடுத்து செய்தி யாளர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் கூறுகையில், 

எங்கள் கடைகளில் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 4000 முதல் 5000 வரை தான் வருமானம் வருகிறது. 

ஆனால் இந்த பாலிதீன் பைகளை விற்பதால் அரசு ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில் நாங்கள் பாலிதீன் கவர்களை பயன்படுத்தி அபராதம் காட்டினாள் அன்று எங்களுக்கு எந்தவித லாபமும் இல்லை. 

இதனால் இதனை முற்றிலும் தவிர்த்து விட்டோம் என கூறினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், பெரிய பெரிய கடைகளில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாடிக்கை யாளர்கள் வரும் கடைகளும் உள்ளன. 

அந்த கடைகளில் தற்போதுவரை பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கவர்களில் மட்டுமே பொருட்கள் விற்கப் படுகின்றன. 

அதனை அரசு தடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்புகின்றனர்.

ஒருவேளை அவர்கள் ஒரு நாளைக்கு கோடிக் கணக்கில் வருமானம் பார்க்கின்றனர் என்பதனால், 

அவருக்கு 5000 ரூபாய் அபராதம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது. 

ஆனால் அங்கு வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதினால் அங்கு தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் விற்கப் படுகின்றன. 

இதனை விரைந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings